டாப் நடிகர்களாக தமிழ் சினிமாவில் வலம் வரும் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரின் 25 வருட சினிமா வளர்ச்சியை விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வெறும் பத்து வருடத்தில் நெருங்கி வந்துவிட்டார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா ரசிகர்கள் மொத்த பேரும் கமர்சியல் சினிமாவா ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வித்தியாசமான கதைகளாலும் எதார்த்தமான நடிப்பாலும் தன்னால் ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என ஆணித்தரமாக நம்பி களம் இறங்கியவர் தான் விஜய் சேதுபதி.
இவரும் கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு காட்சி, சின்ன சின்ன கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்துவந்த விஜய் சேதுபதி முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானது 2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம்தான்.

அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருந்த சரண்யாவின் கதாபாத்திரத்திற்கு தேசிய விருது பெற்றவர் மூலம் விஜய் சேதுபதி மீது கவனம் விழுந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த 10 வருடத்தில் விஜய் சேதுபதியின் வளர்ச்சி அபாரமாக இருந்துள்ளது.
2010 முதல் தற்போதுவரை விஜய் சேதுபதி 46 படங்களில் நடித்து முடித்துள்ளார். விஜய், அஜித் ஆகிய இருவருமே தங்களுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் விஜய் 64 படமும், அஜித் 60 படமும் இதுவரை நடித்து முடித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்துள்ளதால் அடுத்த வருடமே இவர்கள் இருவரையும் தாண்டி விடுவார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். விஜய் சேதுபதியின் இந்த அபரிதமான வளர்ச்சி நல்லதா, கெட்டதா என்பதை யோசிப்பதற்குள் அவர் இன்னும் இருபது படம் நடித்து முடித்து விடுவார் போல. என்னா ஸ்பீடு!