திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

18 வயது பையனாக அடையாளம் தெரியாமல் இருக்கும் விஜய்சேதுபதி.. ட்ரெண்டாகும் போட்டோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கமல்ஹாசனுடன் இணைந்து கலக்கியிருக்கும் விக்ரம் திரைப்படம் தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதில் பயங்கர வில்லத்தனத்துடன் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் விடுதலை திரைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து அவர் ஹிந்தி, மலையாளம் போன்ற பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே பல சீரியல்கள், குறும்படங்கள் போன்றவற்றில் நடித்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இவர் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது கோல்ட் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது விஜய் சேதுபதியின் பழைய புகைப்படம் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் இளமையாக 18 வயது பையன் போல் இருக்கிறார்.

vijay sethupathy
vijay sethupathy

தற்போது விஜய் சேதுபதி சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். ஆனால் அந்த போட்டோவில் அவர் மிகவும் ஸ்டைலாக, சின்ன பையன் போன்று இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் தற்போது அந்த போட்டோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News