வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொண்ணும் இல்ல பொண்டாட்டியும் இல்ல, அப்ப லட்சுமி யாரு.? விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரெய்லர் எப்படி இருக்கு

Maharaja Trailer: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 50வது படமாக உருவாகி இருக்கும் மகாராஜா ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி சலூன் கடை நடத்துபவராக இருக்கிறார்.

அனுராக் காஷ்யப், பாய்ஸ் மணிகண்டன், அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி, பாரதிராஜா என ஏகப்பட்ட பேர் இதில் நடித்துள்ளனர். ட்ரெய்லரின் ஆரம்பமே லட்சுமியை காணும் என விஜய் சேதுபதி போலீசில் புகார் கொடுக்கிறார்.

ஆனால் பொண்ணும் இல்லை பொண்டாட்டியும் இல்லை அக்கா தங்கச்சி இல்லை அப்ப லட்சுமி யாரு என ட்ரெய்லர் முழுவதும் கேட்க வைத்துள்ளார் இயக்குனர். அதேபோல் போலீசும் விஜய் சேதுபதியால் தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.

விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரெய்லர்

ஆனாலும் அசராத விஜய் சேதுபதி லட்சுமியை காணும் என ஒரே பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார். இதில் போலீசாக வரும் நட்டி, அபிராமி, பாரதிராஜா கதாபாத்திரங்களும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த மணிகண்டன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடித்துள்ளார். அவருடைய கேரக்டரை பார்க்கும் போது வில்லனாக இருக்கும் என தெரிகிறது.

ஆனால் இறுதியாக அனுராக் காஷ்யப் வரும் காட்சி செம ட்விஸ்ட் ஆக இருக்கிறது. ஆக மொத்தம் இவர்தான் மெயின் வில்லனாக இருக்கிறார். இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியான ட்ரெய்லர்கள்

Trending News