திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஷாஜகான் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த திவாகரன் கிருஷ்ணா.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத அளவிற்கு வசூலிலும், புகழிலும் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவால் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. ஆனால் சினிமாவின் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களை போல ஒரு சில வெற்றிப் படங்களை மட்டும் தான் நடிகர் விஜய் கொடுத்துள்ளார்.

அதாவது பூவே உனக்காக என்ற படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது, அதன்பிறகு ஒரு சில படங்கள் விஜய் நடிப்பில் வெளியாகி காலம் கடந்து தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட திரைப்படம்தான் ஷாஜகான்.

இப்படம் வெளிவந்த காலத்தில் அனைத்து காதலர்களும் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஒரே திரைப்படம் ஷாஜகான். அதற்கு காரணம் முழுக்க முழுக்க காதலர்களுக்காக எடுக்கப்பட்டது போலிருக்கும் கதையம்சம். இதுவே காதலர்கள் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்தது.

divakaran krishna
divakaran krishna

தான் விரும்பும் காதலி மற்றொரு நண்பரை விரும்புவதை பார்த்து அவர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய். விஜய்யின் நண்பர் கதாபாத்திரத்தில் திவாகரன் கிருஷ்ண நடித்திருப்பார். இறுதியில் கதாநாயகி ரிச்சா பலோட் திவாகரன் கிருஷ்ணாவுடன் விஜய் சேர்த்து வைத்துவிடுவார். இதுதான் படத்தின் முழு கதை.

இப்படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்த திவாகரன் கிருஷ்ணா பிரியா வரம் வேண்டும் மற்றும் சென்னையில் ஒரு காதல் போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். அவரது தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News