செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தை படத்தில் காட்டிய விஜய்.. தளபதி நடிப்பை மோசமாக விளாசிய இயக்குனர்

Actor Vijay: பொதுவாக பெரிய இடத்தில் இருந்தாலே ஆயிரம் பிரச்சனைகளைத் தினமும் சமாளித்து தான் ஆக வேண்டும். அதிலும் பேரும் புகழும் வைத்து பிரபலமாகி விட்டால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் விஜய்யும் நிறைய சர்ச்சைக்குள் சிக்கி தவித்து வருகிறார். ஆனாலும் சில விஷயங்களில் மற்றவர்கள் கூறுவதை வதந்தியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் அவர்கள் கூறுவது சில நேரங்களில் சரியாகத்தான் இருக்கிறது. அப்படி விஜய் நடிப்பை பற்றி ஒருவர் தாறுமாறாக விளாசி வருகிறார். அதாவது வாரிசு படத்தில் சரத்குமாரை தவிர வேறு எவரும் ஒழுங்காக நடிக்கவே இல்லை. குறிப்பாக விஜய்யின் நடிப்பு மிகவும் மோசமாகத் தான் இருந்தது.

Also read: பத்தல பத்தல போல் சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் நா ரெடி.. சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பாடல்

இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் நடிப்பு இந்த அளவுக்கு மோசமாக இருப்பதை பார்த்து மிகவும் வேதனையாக இருக்கிறது. அதாவது படத்தில் இவருடைய அப்பாவை கிண்டல் பண்ணுவது கேலி செய்வது போல நடிப்பதெல்லாம் ஒரு பெரிய ஹீரோ செய்யும் வேலையா. இதை பார்ப்பதற்கு நன்றாக இருக்குமா?

நீங்கள் செய்வதை பார்த்து தான் உங்கள் ரசிகர்கள் உங்களைப் பின்பற்றி வருவார்கள். உங்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுத்து இனிவரும் படங்களில் நடித்தால் இன்னும் உங்கள் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதிலும் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்க அப்பாவிடம் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

Also read: அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

அதை படத்தின் மூலம் காட்டி உங்கள் ரசிகர்களையும் தூண்டி விடாதீர்கள். இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு நடிக்கவே தெரியாது போல் இருந்தது. அதிலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு வளர்ந்து விட்டோம் இனி அப்பாவின் தயவு தேவையில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் அந்த வாரிசு படம் அமைந்திருந்தது.

நீங்கள் நடிக்கும் படம் மூலம் நல்ல கருத்துக்களை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தவறான கருத்துக்களை உங்கள் ரசிகர்களுக்கு பதிவிட வேண்டாம் என்று இயக்குனர் ராஜகுமாரன் கோபமாக ஒரு பேட்டியில் இவரை தாறுமாறாகப் பேசி இருக்கிறார்.

Also read: நீ 1000 பேரோட ஆடுனா நான் 1500 பேரோட ஆடுவேன்.. விஜய் உடன் ஏட்டிக்கு போட்டி போடும் நடிகர் 

Trending News