நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் தியேட்டரில் 100 % இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கு முதலில் செவிசாய்க்காமல் இருந்த முதல்வர் இன்று தியேட்டரில் 100% இருக்கைகளுடன் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என தெரிவித்திருந்தார். இதனால் தற்போது சினிமா ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
ஆனால் பிரபலம் ஒருவர் விஜய் 100% இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார், ஆனால் விஜய்யும் ரசிகர்களுடன் உட்கார்ந்து தியேட்டரில் படம் பார்ப்பாரா என சாமான்ய மனிதன் போல் கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பார், இதனால் தியேட்டரில் தனது ரசிகர்களுடன் விஜய் படம் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புவுள்ளது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கே ஆரவாரம் செய்வார்கள். விஜய்யை தியேட்டரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை வருகிற பொங்கல் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எது எப்படியோ தற்போது விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தான்.