கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் வாரிசு புது அவதாரம் எடுத்திருப்பது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்பந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக விரைவில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தன்னுடைய பேரன் ஜேசன், அப்பா போன்று நடிகராக விரும்பவில்லை.
Also Read: எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68
தன்னைப்போல ஒரு இயக்குனராகவே மாற ஆசைப்படுகிறார் என நிறைய பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அப்ப எஸ்ஏசி சொன்னதெல்லாம் உண்மைதான் போல, இப்போது ஜேசன் கனடாவில் ‘புல் தி ட்ரிக்கர்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இது சம்பந்தப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்ட்டாக்கி கொண்டிருக்கிறார். இந்த குறும்படம் சமீபத்தில் யூட்யூபில் வெளியானது.
இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரப்புகிறது. மேலும் தளபதி ரசிகர்களுக்கு இப்போதே குட்டி லியோ எப்போ விஜய்யை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற ஆசை வந்துவிட்டது. ஆனால் ஜேசன் சஞ்சய் எடுத்த உடனே விஜய்யின் படத்தை இயக்கி விட மாட்டாராம்.
படிப்படியாக முன்னேறி எப்போது டாப் நடிகராக இருக்கும் தன்னுடைய தந்தை விஜய்யின் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதுதான் அவரை வைத்து படம் பண்ணும் முடிவில் இருப்பதாக, ஏற்கனவே பேட்டி ஒன்றின் எஸ்ஏசி பேரனை குறித்து பெருமிதத்துடன் பேசினார். ஆகையால் விஜய்யின் வாரிசு தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பதை தளபதி ரசிகர்களிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கோலிவுட்டும் பெருமிதம் கொள்கிறது.
விரைவில் ஜேசன் சஞ்சய் கனடாவில் இருந்து இந்தியா திரும்பி தன்னுடைய முதல் தமிழ் படத்தை இயக்குவதற்காக வாய்ப்பும் தென்படுகிறது. மேலும் தமிழில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் இயக்கம் குறித்த முழுமையான பயிற்சியை முடித்த பிறகு தான் இயக்குனராக களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
இயக்குனராக மாறிய ஜேசன் சஞ்சய்
![vijay-son-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/05/vijay-son-cinemapettai.jpg)
Also Read: லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?