ஹீரோயினை கண்டுபிடித்த விஜய் வாரிசு.. சத்தம் இல்லாமல் நடக்கும் ஷூட்டிங்

Jason Sanjay: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாத்தா போல் இயக்குனர் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

லைக்கா தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் அறிவிப்பு எப்போதோ வெளியானது. அதன் பிறகு படம் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.

இதனால் படம் நின்று விட்டது என்று கூட சில தகவல்கள் பரவியது. ஆனால் தற்போது இப்படம் பற்றிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

சத்தம் இல்லாமல் நடக்கும் ஷூட்டிங்

அதாவது இப்படத்தின் சூட்டிங் கடந்த ஒரு வாரமாக கோபுரம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அது மட்டும் இன்றி தன் முதல் பட ஹீரோயினையும் சஞ்சய் கண்டுபிடித்துவிட்டார்.

அதன்படி தெலுங்கு திரை உலகில் முன்னேறி வந்து கொண்டிருக்கும் இளம் நடிகை ஃபரியா அப்துல்லா தான் இப்படத்தின் கதாநாயகி. இவர் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து வள்ளி மயில் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதை அடுத்து இரண்டாவது படத்திலேயே பெரும் கூட்டணியுடன் பணியாற்றுகிறார். இப்படம் வெளியானால் நிச்சயம் அவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் சஞ்சய் படப்பிடிப்பை ரொம்ப அழகாக நடத்தி வருகிறாராம். நிச்சயம் முதல் படமே அவருக்கான பெயர் சொல்லும் என்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Leave a Comment