புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் மகனுடன் ஊர் சுற்றிய பெண் தோழி.. வைரலாகும் செல்பி

கடந்த சில தினங்களாக தளபதி விஜய்யை விட அவரது மகன் ஜேசன் சஞ்சய் நண்பர்களுடன் ஊர் சுற்றிய வீடியோ தான் இணையதளங்களில் உலா வருகிறது. அதனைத் தொடர்ந்து அவருடன் இருந்த பெண் தோழி யார் என்பது தெரியாமல் இருந்தது. ஜேசன் சஞ்சய் கடந்த வருடம்தான் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து முடித்துள்ளதாகவும் விரைவில் இயக்குனராக களம் இறங்க உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் தன்னுடைய நண்பர்களுடன் இரவில் ஊர் சுற்றித்திரிந்த வீடியோ வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வீடியோ பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி விட்டது.

மேலும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் ஒவ்வொரு அசைவுகளும் தளபதி விஜய் போலவே இருக்கின்றன எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சஞ்சயின் பெண் தோழி யார் என்பதைப் பார்க்கவும் ஆர்வமாக இருந்தனர். தற்போது ஜேசன் சஞ்சய் தன் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. அதில் அந்தப் பெண் தோழியும் இடம் பெற்றுள்ளார்.

vijay-son-sanjay-friends-photo
vijay-son-sanjay-friends-photo

முன்னதாக குறும்படம் ஒன்றில் நடித்திருந்த ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக ஆசைப்படுவதாக அவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரை ஹீரோவாக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

Trending News