வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு விஜய்யுடன் நடனமாட இருந்த பிரபல நடிகை.. இவங்களும் டான்ஸ் மாஸ்டர் தானப்பா

தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடி கணக்கில் வசூலை வாரிக் குவித்து வருகின்றன.

இதனாலேயே பல தயாரிப்பாளர்களும் இவர் படத்தை தயாரிப்பதற்கு முன் வருது மட்டுமில்லாமல் பல நடிகர்கள் மற்றும் டான்ஸ் மாஸ்டர்களும் விஜய்யை நாடி வருகின்றனர்.

அதற்கு காரணம் விஜய் நடிப்பை தாண்டி பாடல் பாடுவது நடனம் ஆடுவது என சினிமாவின் ஒரு சில துறைகளில் வெற்றி கண்டுள்ளார். அதனாலேயே பல பாடலாசிரியர்களும் விஜய்யை பாட வைக்க ஆசைப்படுவார்கள். அதேபோல் நடன இயக்குனர்கள் விஜய்யுடன் நடனமாட ஆசைப்படுவார்கள்.

gayathri-raghuram-cinemapettai
gayathri-raghuram-cinemapettai

அதற்கு காரணம் விஜய்க்கு ஏகப்பட்ட தமிழ்நாட்டை தாண்டி கேரளா போன்ற மற்ற மாநிலங்களிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் விஜய்யுடன் ஒருமுறை திரையில் வந்தால் போதும் நமக்கு அறிமுகமே தேவை இல்லை என்பதே இதற்குக் காரணம்.

அந்த வகையில் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடன இயக்குனராகவும் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்.

இவர் பல பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் ஆல்தோட்டபூபதி பாடலில் முதலில் சிம்ரனுக்கு பதிலாக காயத்ரி ரகுராம் தான் நடனமாட இருந்துள்ளார்.

ஆனால் பின்பு கால்ஷீட் பிரச்சினை காரணமாக வேறு வழியின்றி சிம்ரன் நடனமாடியுள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் சிறப்பாக நடனமாட கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News