Vijay: இன்று காலையில் தான் தளபதி 69 படத்தின் முதல் போஸ்டர் வந்தது. இனி அதிகாரப்பூர்வமாக ஜனநாயகன் என்றே அந்த படத்தை சொல்லலாம்.
அதற்குள்ளேயே இரண்டாவது போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார்கள் பட குழுவினர். இந்த படம் விஜய்க்கு கடைசி படமாக அமைய இருக்கிறது.
இந்த படத்திற்குப் பிறகு தன்னை முழு நேர அரசியல்வாதியாக மாற்றிக் கொள்ள இருப்பதாக விஜய் கடந்த பிப்ரவரி மாதமே சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் தன்னுடைய கடைசி படத்தை தரமான அரசியல் படமாக எடுக்க இருக்கிறார். படத்தின் போஸ்டர்களே இதற்கு சாட்சி.
செகண்ட் லுக் போஸ்டர்
ஏற்கனவே முதல் போஸ்டரில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே நின்று செல்பி எடுப்பது போல் இருந்தது. இரண்டாவது போஸ்டரில் விஜய் சாட்டையை சுழற்றுவது போல் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
பார்ப்பதற்கு எங்கள் வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் கையில் சாட்டையை வைத்திருப்பது போல் தான் இருக்கிறது.
கையில் சாட்டையை வைத்துக்கொண்டு நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் என்று பாடி இருப்பார். அதே காட்சியை மீண்டும் கண் முன் கொண்டு வந்திருக்கிறது விஜய் கையில் வைத்திருக்கும் சாட்டை.

படத்தின் மீது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த இரண்டு போஸ்டர்களும் எப்போ படத்தின் ரிலீஸ் செய் அறிவிக்க போறீங்க என்ற ஆர்வத்தை கிளப்பி இருக்கிறது.