தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 60% படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஒரு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதிரடி ஆக்சன் கதை களத்தை கொண்ட இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.
லியோ திரைப்படம் விஜய்க்கு 67வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் பாதி வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய 68 ஆவது படத்தை பற்றி பல வியூகங்கள் எழ ஆரம்பித்து விட்டன. அட்லி ஜவான் திரைப்படத்தை முடித்து விட்டதால் அடுத்து விஜய் அட்லிக்கு தான் வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் வீரசிம்மா ரெட்டி திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனரும் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை அடுத்து தான் கடந்த மாதம் 68வது படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு பண்ண இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதை நடிகர் ஜீவாவும் தன்னுடைய ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் தளபதியின் 68 வது படத்தை இயக்க இருப்பது இயக்குனர் வெங்கட் பிரபு என்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாருக்கு மங்காத்தா மற்றும் சிம்புவுக்கு மாநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு முதன்முறையாக தளபதியை இயக்க இருக்கிறார். இருந்தாலும் அவருடைய சமீபத்திய படமான கஸ்டடி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருப்பது விஜயின் ரசிகர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தளபதி விஜய் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவதற்கு ஒரு முக்கியமான கண்டிஷனை போட்டு இருக்கிறாராம். அதாவது யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க வேண்டாம், அனிருத் தான் இசையமைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம். தளபதி விஜய்க்கு அனிருத் அதிர்ஷ்ட இசையமைப்பாளராக இருந்தாலும், வெங்கட் பிரபுவுக்கு யுவன் சங்கர் ராஜா தான் ஆஸ்தான இசையமைப்பாளர்.
வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா இல்லாமல் படம் பண்ணுவதற்கு ஒப்புக் கொள்வாரா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். விஜய் யுவன் சங்கர் ராஜாவை வேண்டாம் என சொல்லுவதற்கு காரணம் அவருடைய புதிய கீதை படத்திற்கு இவன்தான் இசையமைத்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால் தான் மீண்டும் அவருடன் இணைய வேண்டாம் என விஜய் முடிவெடுத்து இருக்கிறார்.
Also Read:கஸ்டடி படத்தால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு.. மூன்று நாள் வசூலில் முடிவானது படத்தின் தோல்வி.!