திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

விஜய்க்கு சொன்ன கதையில் நடித்த விஷால்.. என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பிசியாக வலம் வருபவர் தான் நடிகர் சுந்தர்.சி. இவர் இது தவிர ஒரு சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். மறைந்த பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய சுந்தர்.சி அதனையடுத்து தனது திறமையால் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். பல முன்னணி நடிகர்களின் படங்களையும் சுந்தர்.சி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரஜினியை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம், அஜித்தை வைத்து உன்னை தேடி, சிம்புவை வைத்து வந்தா ராஜாவாதான் வருவேன் என முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் இயக்கியவர் தான் சுந்தர் சி. நவரச நாயகன் கார்த்திக்கை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால், இதுவரை இவர் நடிகர் விஜயை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை. விஜயை வைத்து எப்படியாவது ஒரு படம் இயக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எப்படியோ விஜயின் அப்பாயின்மெண்டை வாங்கி ஒரு கதையை கூறியுள்ளார்.

action-vishal
action-vishal

கதையை கேட்ட விஜய், முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி நன்றாக இல்லை எனக்கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டாராம். அதன் பின்னர் அந்த கதையில் விஷாலை நடிக்க வைத்து சுந்தர் சி இயக்கிய படம்தான் ஆக்‌ஷன். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்த கதை நிச்சயம் தேறாது என்று தெரிந்துதான் விஜய் இதில் இருந்து கழண்டு கொண்டார் போல. ஆனால், விஷால் இதில் கோட்டை விட்டு விட்டார். இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள் நல்ல வேளை நம்ம தளபதி இந்த படத்தில் நடிக்கவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Trending News