திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

இந்த பாட்டை நீங்கதான் பாடணும் என விஜய்யிடம் அடம்பிடித்து பாட வைத்த யுவன்.. பலரும் அறிந்திராத தகவல்

விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணையாதா? என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்ற செய்தி இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல இருக்கிறதாம் விஜய் ரசிகர்களுக்கு.

கடந்த சில வருடங்களில் விஜய்யின் சினிமா வளர்ச்சி பற்றி சொல்லத் தேவையில்லை. படத்திற்கு படம் வியாபார ரீதியாக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். மேலும் அவரது சம்பளமும் 100 கோடியை தாண்டிவிட்டது.

விஜய்யின் ஒரு படம் அறிவிப்பின் போதும் அந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா பணியாற்றுவார் என பல வருடமாக ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக இருவரும் இணைந்து புதிய கீதை என்ற படத்தில் பணியாற்றினர்.

அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேவேளையில் யுவன் சங்கர் ராஜாவும் தொடர்ந்து அஜீத் படங்களில் பணியாற்றச் சென்றுவிட்டார். அடுத்ததாக வெளிவர இருக்கும் அஜித்தின் வலிமை படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை.

யுவன் சங்கர் ராஜா தன்னுடைய இளம் வயதிலேயே இசையமைப்பாளராக வலம் வரத்தொடங்கினார். விஜய்யும் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் குறைந்தது ஒரு படத்திற்கு இரண்டு பாடல்களையாவது பாடிவிடுவார்.

இப்படி இருக்கையில் 1998 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான வேலை என்ற படத்தில் ‘காலத்துக்கேற்ற ஒரு கானா’ என்ற பாடலை விஜய் பாடியே ஆகவேண்டுமென ஒற்றைக்காலில் நின்று விஜய்யை பாட வைத்தாராம் யுவன் சங்கர் ராஜா. அந்த வேலை படத்தில் நாசர் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

vijay-yuvan-cinemapettai
vijay-yuvan-cinemapettai

Trending News