சூர்யாவின் தோல்வியை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட விஜய்.. மாஸ்டர் பிளான்!

ஒரு காலத்தில் ரஜினிக்கு பிறகு அதிக அளவு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகராகவும் அதிகம் மார்க்கெட் வைத்துள்ள நடிகராகவும் வலம் வந்தவர் சூர்யா. 2000 முதல் 2010 வரை சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் அதற்கு பறை சாற்றும்.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த காலகட்டம் அது. ஆனால் சூர்யாவின் படங்கள் மட்டும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தன. இவ்வளவு ஏன் விஜய் படத்துடன் மோதிய சூர்யா படங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூர்யாவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்தது.

அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது என்னமோ ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் திரைப்படம் தான். சிங்கம் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட இடமாகவும் இருந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களில் சூர்யாவுக்கு சிறப்பான படங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடித்த படங்கள் தமிழில் வெற்றி பெறுவதே குதிரைக் கொம்பாக இருந்தது. அதேபோல் தெலுங்கிலும் அவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. இந்த நேரத்தில் தான் விஜய்யின் அபார வளர்ச்சி தெலுங்கில் சூர்யாவின் மார்க்கெட்டை சுக்குநூறாக நொறுங்கியது.

சூர்யா தோல்வி படங்கள் கொடுத்து வந்த காலகட்டங்களில் விஜய்யின் படங்கள் அனைத்துமே தெலுங்கு ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடைசியாக வெளியான மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற படங்கள் அனைத்துமே 20 கோடிக்கு மேல் வசூல் சாதனைகள் புரிந்துள்ளன.

தற்போதைக்கு தெலுங்கு சினிமாவில் அதிக மார்க்கெட் வைத்திருக்கும் தமிழ் நடிகர் என்றால் அது விஜய்தான். இனிவரும் காலகட்டங்களில் விஜய் மற்றும் சூர்யா படங்கள் கண்டிப்பாக தெலுங்கில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்பதே தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கருத்தாக உள்ளது.

vijay-suriya-cinemapettai
vijay-suriya-cinemapettai