வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யாரு சூப்பர் ஸ்டாரு? யாரு தல? எல்லாத்துக்கும் மொத்தமா தளபதி வைத்த சுவாரஸ்யமான முற்றுப்புள்ளி

Super Star-Vijay: கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தான். அதாவது வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சரத்குமார் உட்பட சில பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்பது போல பேசி சர்ச்சையை கிளப்பி இருந்தனர்.

இதற்கு அப்போது விஜய்யும் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்ததால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்க இணையத்தில் ஒரு அக்கப்போரே போய்க் கொண்டிருந்தது. மேலும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடந்தால் இதில் விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த விழாவும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்றைய தினம் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தபோது இதுகுறித்து விஜய் பேசி இருக்கிறார். அதாவது புரட்சித் தலைவர் என்றால் அவர் ஒருவர்தான். அதேபோல் நடிகர் திலகம் என்றால் ஒருவர், புரட்சி கலைஞர் என்றால் ஒருவர், அதே மாதிரி உலக நாயகன் என்றால் ஒருவர்தான்.

Also Read : சூப்பர் ஸ்டாரை குத்தி காட்டிய லோகேஷின் கூட்டாளி.. அனல் பறந்த லியோ சக்ஸஸ் மீட் மேடை

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான், தலனா ஒருத்தர் தான் என மொத்த சர்ச்சைக்கும் விஜய் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆகையால் ரஜினி தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்பது கூறிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக நீங்கள் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி, நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்கிறேன் என செம மாஸாக விஜய் பேசி இருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் உங்களின் அன்புக்கு இந்த தோலை செருப்பாக தைத்து போட்டாலும் ஈடாகாது என உச்சி குளிர்ந்து சில வார்த்தைகளை கூறியிருந்தார். மேலும் ரசிகர்களுக்கு எச்சரிக்கும் படியாகவும் சில விஷயங்களை விஜய் பேசி இருந்தார். அதாவது சமூக வலைதளங்களில் உங்களின் கோபத்தை பார்த்தேன்.

இவ்வளவு கோபம் என்பது தேவையில்லாத ஒன்று. நம்முடைய வேலையை நான் பார்த்துட்டு போகலாம், ஏனென்றால் நமக்கு நிறைய வேலை இருக்கிறது என்று சின்ன அறிவுரையையும் கூறி இருக்கிறார். இதன் பிறகு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள் என்ற முடிவு எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : லியோ சக்சஸ் மீட்டை வைத்தே பல கோடி சம்பாதித்த லலித்.. அம்பலமான உண்மை

Trending News