சமூக வலைதளங்களில் விஜய், அஜித் சண்டை இன்று நேற்று ஆரம்பித்தல்ல. தொன்று தொட்டு காலம் காலமாக குறிப்பிட்ட இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் அடித்துக் கொள்வார்கள். ஆனால் சமீபகாலமாக விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் தியேட்டர்களில் நல்ல வசூல் செய்ததைத் தொடர்ந்து அமேசான் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானது முதலே நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திடீரென ட்விட்டர் பக்கத்தில் #எச்சநாய்விஜய் என்ற பதிவு வைரலாகி வருகிறது. இதனை தல அஜித் ரசிகர்கள் தான் செய்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அதற்கான காரணத்தையும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
மாஸ்டர் படத்தின் சண்டைக் காட்சியில் இடம்பெறும் ஒரு பெட்டிக்கடையில் தல அஜித் பற்றிய வசனம் ஒன்று இடம்பெற்ற பத்திரிகைதாள் இருந்துள்ளது. அதில் அஜித் குதித்தார் கால் ஜவ்வு கிழிந்தது என இடம்பெற்றிருந்தது. இதனால் விஜய் வேண்டுமென்றே தல அஜித்தை கிண்டல் செய்துள்ளார் என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர்.
முன்னதாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தருதல என்ற பெயரில் ஒரு பாடல் இடம் பெற்றிருந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். அதைப் பார்த்த தல ரசிகர்கள் கொந்தளித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டதால் உடனடியாக படக்குழு அதை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
விஜய் வேண்டுமென்றே செய்தாரா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்பதை படக்குழுவினர் தான் அறிவிக்க வேண்டும். முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் இப்படி கேவலமாக நடந்து கொள்வது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.