கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் ரசிகர்களை மிகவும் சோதித்த படம் என்றால் அது சர்கார் தான். என்னதான் படம் மாஸ்ஹிட், சூப்பர் ஹிட் என வெளியில் சொல்லிக் கொண்டாலும் சர்கார் படம் முழுமையாக விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை.
சன் பிக்சர்ஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அது மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக விஜய் தன்னுடைய படங்களில் அரசியல் கருத்துக்களை சொல்லி வருவது சலிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தளபதி 65 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். முதலில் இந்த படத்தை முருகதாஸ் இயக்க இருந்தார். ஆனால் முருகதாஸ் சொன்ன கதை பெரிய அளவில் விஜய்யை கவராததால் இயக்குனரை மாற்றிவிட்டார் விஜய்.
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் தளபதி 65 படத்தை இயக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் தளபதி 65 படம் ஒரு அரசியல் படம் என வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய வீடியோவில் கூறியதிலிருந்து இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. இதனால் வழக்கம்போல் இணையதளங்களில் விஜய்யை பிடிக்காதவர்கள் சர்கார் 2 என கிண்டலடித்து வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள் வெளியில் சமாளித்தாலும் மனதிற்குள் சர்கார் படம் போல் இருந்து விடுமோ என்ற பயம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவுள்ளதால் படம் வேறு மாதிரியாக இருக்கும் என நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.