புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சரக்கு இல்லாததால் இயக்குனரை தூக்கி எறிந்த விஜய்.. சம்பாதிக்க மட்டும் வந்தா இப்படித்தான் நிலைமை 

சமீப காலமாகவே தளபதி விஜய் நடிப்பில் வெளிவரும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பவர்கள் அந்த படத்தின் இயக்குனர்கள். இவர்கள்தான் ஒரு படம் எப்படி எல்லாம் அமைய வேண்டும் என்று தனது இயக்கத்தின் மூலம்  காண்பிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட்  திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதே போல் தான் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் மண்ணை கவ்வியது.

Also Read: 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ஜோடி.. தளபதி 67 அப்டேட்டால் குதூகலமான சோசியல் மீடியா

அந்த வகையில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடியவர்களுக்கு அந்தப் படத்தின் மூலம் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான் காலப்போக்கில் காணாமல் போய் விடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படம் ஷூட்டிங் இன் பொழுது விஜய்யும் இயக்குனர் நெல்சனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.  ஆனால் இவரது இயக்கத்தில் வந்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்காததால் இவர் எப்பொழுது போன் செய்தால் விஜய் எடுப்பதில்லையாம்.

Also Read: துப்பாக்கி படத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்பு.. 11 வருடம் கழித்து தளபதி 67ல் விட்டதைப் பிடித்த நடிகை

இந்நிலையில் இவரை தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் போன் செய்தாலும் கூட விஜய் எடுப்பதில்லையாம். இதே போல தான் ரஜினியும் தோல்வி அடைந்த இயக்குனர்கள் போன் செய்தால் எடுக்க மாட்டார். தற்பொழுது ரஜினி பின்பற்றும் செயலை விஜய்யும் செய்யத் தொடங்கி இருப்பது போல் தெரிகிறது.

சினிமாவில் பிரபலமாக இருக்கக்கூடிய விஜய், ரஜினி மட்டுமல்லாமல் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய அனைவருமே தங்களுக்கு நிகரான பெயர் இருந்தால் மட்டுமே அவர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். பணம்  சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கும் இயக்குனர்களை கண்டு கூட மாட்டார்கள்.இந்த நிலைதான் தற்பொழுது இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு நடந்துள்ளது.

Also Read: தளபதியை ஒதுக்கும் உலக நாயகன்.. குளறுபடி செய்ததால் கோபத்தின் உச்சகட்டத்தில் கமல்

Trending News