புதன்கிழமை, ஜனவரி 15, 2025

27 வயது கம்மியான நடிகையுடன் ஜோடி போடும் விஜய்.. தளபதி 69 அப்டேட் கொடுத்த எச் வினோத்

Vijay in Thalapathy 69: சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் நடித்த படம் என்றால் ஆவலுடன் விரும்பி பார்க்க ஆசைப்படுபவர்கள். அதிலும் விஜய்யின் டான்ஸ், ஸ்டைல் பார்த்து அதை அப்படியே ஃபாலோ பண்ணும் அளவிற்கு சின்ன குழந்தைகளுக்கு ஃபேவரிட் நடிகராக இருக்கிறார். அதனால் தளபதி படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் வசூல் அளவிலும் மன்னனாக ஜொலித்து வருவார்.

அப்படிப்பட்டவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு போகப்போவதால் கடைசி படமாக தளபதி 69 படத்தை முடித்துவிட்டு பிரேக் எடுக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்குள் தளபதி 68 படமான கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வைத்திருக்கிறார். இதிலிருந்து வெளிவந்த மூன்று பாடல்களும் தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

ஜோராக கூட்டணி அமைந்த தளபதி 69

அதனால் படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் வழக்கம்போல் விஜய் படம் நஷ்டம் ஏற்படாத அளவிற்கு வெற்றியை கொடுத்து விடும். இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இதனால் அடுத்த படத்திற்கான தளபதி 69 க்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.

அந்த வகையில் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் கமிட் ஆகி விட்டார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார். அதே மாதிரி முக்கியமான கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகையும் இணைந்து இருக்கிறார். அவர் யார் என்றால் மலையாள நடிகையான மமிதா பைஜு. இவர் நடித்த பிரேமலு தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றதால் 27 வயது கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை என்று விஜய்க்கு இன்னொரு ஜோடியாக கமிட் பண்ணி விட்டார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான டெஸ்டிங் லுக் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் குறித்து அப்டேட்டுகளை வெளியிடுவார்கள். அத்துடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது. கடைசி படமாக இருப்பதால் எந்தவித ரிஸ்க்கும் இருக்க வேண்டாம் என்று ராக்ஸ்டார் அனிருத்தை கமிட் பண்ணி விட்டார்.

மேலும் தளபதி 69 படத்தை கேவிஎன் புரொடக்சன் தயாரிக்கப் போகிறது. அத்துடன் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன் லால் நடிக்கப் போகிறார். தொடர்ந்து இதுபோன்ற புதுப்புது அப்டேட்டுகளை இனி எச் வினோத் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீசுக்கு தயாராக இருக்கும் கோட் படம்

Trending News