புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வட போச்சுன்னு புலம்பும் கார்த்திக் சுப்புராஜ்.. கிலோ கணக்கில் விஜய் கிண்டிய அல்வா

Thalapathy 69: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படம் எப்படி அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அதேபோன்று அதன் இரண்டாம் பாகமும் அமைந்துவிட்டது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் உடன் படம் பண்ணுவதற்கும் நடிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் பண்ணிய கார்த்திக் சுப்புராஜ் விஜய்யை இயக்கவும் ஆசைப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இரண்டு முறை விஜய் இடம் அவர் கதை சொல்லும்லியும் ஏதோ ஒன்று செட்டாகாததால் இருவரும் படம் பண்ணாமலேயே இருந்து வந்தனர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக நேற்ற்றிலிருந்து செய்திகள் வெளியானது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தளபதி 69 படத்தை இயக்கப் போவதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் நேற்று செய்தி வெளியாக இருந்தது. இதற்கிடையில் தற்போது இந்த படத்தை பற்றி வேறு விதமான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதாவது தளபதி 69 படத்தை இயக்க வாய்ப்பு தருவதாக சொல்லி விஜய் மொத்தமாக அல்வா கிண்டி விட்டதாக சொல்லப்படுகிறது.

Also Read:தளபதி-68 படத்தின் ரிலீஸ் தேதி இதுதானாம்.? இரண்டு நாட்களை குறி வைத்த விஜய்

விஜய்க்கு இந்த வருடத்தின் தொடக்கத்தில் வாரிசு படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் ரிலீஸ் ஆன கையோடு பிப்ரவரி மாதம் லியோ படத்தை தொடங்கினார். லியோ படம் படம் தான் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சூட்டோடு சூட்டாக, பிரேக் கூட எடுக்காமல் விஜய் தன்னுடைய 68வது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

விஜய் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

தளபதி 69 படத்தை நடிகர் விஜய்யின் ஆசை தம்பி அட்லீ இயக்குவதாக செய்திகள் வெளியானது. அதை தொடர்ந்து தான் இல்லை, கார்த்திக் சுப்புராஜ் தான் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. உண்மையில் இந்த ரெண்டுமே நடக்கப்போவது இல்லை. விஜய் தளபதி 68 க்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவுக்கு கேப் கொடுக்கப் போகிறார். அந்த கேப்பில் தான் மக்கள் பணி மற்றும் அரசியல் பணியை செய்ய இருக்கிறார்.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் உடன் விஜய் இணைவது இரண்டு முறை தட்டிப் போன நிலையில் இப்போது மூன்றாவது முறையும் அதுதான் நடக்க இருக்கிறது. இருந்தாலும் விஜய் இரண்டு வருடங்கள் பிரேக் எடுப்பது பற்றி அவருடைய தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகாமல் இருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read:விஜய்யுடன் நடித்து பாலிவுட் போன 5 நடிகைகள்.. தளபதிக்கு ஐஸ் வைத்து எஸ்கேப் ஆன பூஜா ஹெக்டே

Trending News