திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரசிகர்களுக்கு தளபதி விஜய் வைத்த செக்.. புஸ்ஸி ஆனந்த் மூலம் போடப்பட்டிருக்கும் 5 முக்கிய கட்டுப்பாடுகள்

Thalapathy Vijay: தளபதி விஜய்க்கு அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் லியோ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பக்கம் அடுத்த அடுத்த படங்கள் என படு பிசியாக இருக்கும் விஜய், அதே நேரத்தில் தன்னுடைய மக்கள் இயக்கம் கட்சியின் வேலைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

லியோ படத்தின் சூட்டிங் வேலைகளில் பிசியாக இருக்கும் பொழுதே விஜய் அவ்வப்போது கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனை செய்வது, அவர்களுடன் மதிய விருது என தன்னுடைய இயக்கத்தை ஒருங்கிணைக்கும் வேலைகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனாலேயே விஜய் அடுத்து அரசியலில் களம் இறங்கி இருக்கிறார் என செய்திகள் காட்டுத்தீயாய் பரவியது.

Also Read:விஜய்க்கு நடக்கும் மருத்துவ சோதனை.. புதுவித யோசனைக்கு அமெரிக்கா சென்றதன் ரகசியம்

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஐடி பிரிவு ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று இருக்கிறது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு அவரது தரப்பிலிருந்து குறிப்பிட்ட ஐந்து நிபந்தனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இது விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.

நிபந்தங்களைகளின் படி இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் செய்திகளை மற்றும் ஷேர் செய்ய கூடாது, எந்த நிலையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கவே கூடாது, மொழி, இனம், சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் நல்லிணக்க பாதையில் பயணிக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது.

Also Read:சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், சினிமா கலைஞர்கள் போன்றவர்களை பற்றிய கருத்துக்களும், தர்க்கங்களும் நாகரிகத்துடனும், ஆதாரத்துடன் கூடிய உண்மையின் அடிப்படையிலும், கருத்தியலாகவும், கண்ணியமான முறையில் வார்த்தைகளை உபயோகப்படுத்தியும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை மற்றும் ரஜினி – விஜய் என தேவையில்லாமல் கிளப்பப்படும் போட்டிகளுக்கு கிடுக்கு பிடி போட விஜய் இப்படி ஒரு நிபந்தனைகளை தன்னுடைய நிர்வாகிகளுக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்தடுத்து அவருடைய அரசியல் நகர்வுகளும் இந்த கூட்டத்திற்கு பிறகு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:மதில் மேல் பூனையாக இருக்கும் விஜய்.. நம்பி அசிங்கப்பட போகும் தளபதி, அடித்து சொல்லும் பிரபலம்

Trending News