சமீபகாலமாக யூடியூப் சேனல்கள் வரம்புமீறிய கேள்விகளை பிரபலங்களிடம் கேட்பதும், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஏதாவது ஒரு சர்ச்சை பதிலை கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு மைக்கை தூக்கிக்கொண்டு பொதுமக்களிடம் இரட்டை அர்த்தங்களில் கேள்விகள் கேட்டு வந்தனர். ஆனால் சமீபத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது பெரும்பாலும் மக்களிடம் நேரடியாக கேள்வி கேட்பதை குறைத்துக் கொண்டனர்.
அதேபோல் யூடியூப் சேனல்கள் தாங்கள் அழைத்து வரும் பிரபலங்களிடம் திருமணமான நடிகர்கள் என்று கூட பார்க்காமல் விவகாரமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதுகூட பரவாயில்லை, மிகவும் சிறுவயது நடிகைகளிடம் கூட வயதுக்கு மீறிய கேள்விகளைக் கேட்டு சிக்கலில் மாட்டி விடுகின்றனர்.
அந்த வகையில் ராட்சசன் படத்தில் நடித்த சிறு பிள்ளையான ரவீனா என்ற பிரபலத்திடம் பிரபல யூடியூப் சேனல் கிஸ் மீ, மேரி மீ என்ற பெயரில் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்த ரவீனா, சூர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அஜித்தை முத்தமிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யா என்ற மிகப் பெரிய நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது என்பதை அறிந்தும் சிறுபிள்ளை ரவீனா அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியதிலிருந்தே பிரபலமாக இருக்கும் சிறு குழந்தைகளும் கெட்டுப்போவது அப்பட்டமாகத் தெரிந்து வருகிறது.
ராட்சசன் படத்தில் நடித்துள்ள இந்த ரவீனா சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயதுக்கு மீறிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார்.