திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என் அம்மாவையும் அட்ஜஸ்ட் செய்ய சொன்னாங்க.. அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட விஜய் டிவி நடிகை

சமீபகாலமாக திரையுலகில் மட்டுமல்லாமல் பல துறைகளிலும் இருக்கும் பெண்கள் பாலியல் தொடர்பான தொல்லைகளை பெருமளவில் சந்தித்து வருகின்றனர். அப்படி தங்களுக்கு நேர்ந்த அந்த பிரச்சனைகள் குறித்து பிரபலங்கள் பலரும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

அது குறித்து நடந்த சந்திப்பில் பிரபலம் ஒருவர் இந்த படத்தில் நடிப்பதற்கு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். முதலில் அப்படி என்றால் என்ன என்று தெரியாத ஸ்ரீ நிதியின் அம்மா அதெல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை, சாப்பாடு விஷயத்தில் நாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த நபர் நாங்கள் அதைப் பற்றி கேட்கவில்லை என்று அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதை எதிர்பார்க்காத அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த நபர், உங்கள் மகள் தான் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பது இல்லை அவரின் அம்மா கூட அட்ஜஸ்ட் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத அவர்கள் இருவரும் எங்களுக்கு விருப்பம் இல்லை, நாங்கள் அந்த மாதிரி குடும்பம் இல்லை என்று கூறிவிட்டு வாய்ப்பே வேண்டாம் என்று வந்திருக்கிறார்கள். தற்போது இதைப் பற்றி கூறிய ஸ்ரீநிதி எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது போன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களைப் போல் மற்றவர்களையும் பார்க்க வேண்டும் என்று தனக்கு நடந்த கசப்பான அந்த அனுபவத்தைப் பற்றி முதல் முறையாக தெரிவித்துள்ளார். நடிகைகளுக்கு இந்தப் பிரச்சினை இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர்களின் அம்மாவே இது போன்ற தொல்லைகளை சந்தித்து இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News