ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவருடைய அழகும், திறமையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. கிட்டத்தட்ட பல வருடங்களாக இவர் சின்னத்திரையில் பணியாற்றி வருகிறார்.
மேலும் விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெறும். அவ்வாறு காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் சமீபகாலமாக டிடியை சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். இந்நிலையில் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் விஜய் டிவியில் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்திருக்கும் தி லெஜன்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிடி தொகுத்து வழங்கினார். இவருடன் இணைந்து தொகுப்பாளினி அர்ச்சனாவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது டிடி வாக்கிங் ஸ்டிக் உடன் வந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி உள்ளது. இதைப்பார்த்த டிடியின் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் டிடி தனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது, அதனால் தான் வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தினேன் என தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் தற்போது டிடிக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். ஆனால் டிடி தனக்குள்ள குறையை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
![dd-dhivyadharshini](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/06/dd-dhivyadharshini.jpg)