சர்ச்சைகளுக்கு பெயர் போன தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை விட அதிக பிரபலமாக இருப்பது அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள். இந்தத் தொகுப்பாளர்கள் அதிக அளவில் சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்கள்.
திவ்யதர்ஷினி: டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆனவர். இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்று. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி நடிகர் கமல்ஹாசனிடம் தனக்கு முத்தம் தருமாறு கேட்டு சர்ச்சையில் சிக்கினார். தற்போது இவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவும் சர்ச்சையானது.

ரம்யா: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருபவர் ரம்யா. தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர் திருமணமான சிறிது நாட்களிலேயே தனது கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். திருமணத்திற்குப் பிறகு நடிக்கக்கூடாது என்று கூறிய காரணத்தால் கணவரை பிரிந்ததாக இவர் கூறினார். இது மிகப் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
கோபிநாத்: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணுக்கு படிப்பு உதவி செய்வதாக அவர் வாக்களித்தார். இதனால் அவரை தொடர்பு கொண்ட அந்தப் பெண்ணிடம் உதவி செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அந்தப் பெண்ணே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மைனா நந்தினி: சின்னத்திரையில் மைனா என்று அழைக்கப்படும் நந்தினி கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியால் நந்தினி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது நந்தினி யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தாடி பாலாஜி: தாடி பாலாஜியின் மனைவி நித்யா தன் கணவர் தன்னையும், தன் குழந்தையையும் கொடுமை படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்தார். தற்போது விவாகரத்து கேட்டு தாடி பாலாஜியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த ஜோடி பிக்பாஸில் பங்கேற்று அங்கும் சண்டையிட்டு சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.