செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய் டிவி பிரபலங்களின் ரியலான 6 ஜோடியின் புகைப்படங்கள்.. பலநாள் திருமணத்தை மறைத்த நடிகர்

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் விஜய் டிவியின் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருக்கிறது. அப்படி விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களின் ரியல் லைப் பார்ட்னர்களை பற்றி காண்போம்.

மாகாபா ஆனந்த்: இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய மனைவி சூசன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

makapa
makapa

ரக்ஷன்: கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ரக்ஷன் ரசிகர்களிடையே ரொம்பவும் பிரபலம். இவருக்கு திருமணம் ஆன விஷயமே பலருக்கும் தெரியாமல் இருந்தது. அந்த அளவுக்கு தன் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் தன்னுடைய மனைவியின் போட்டோவை மீடியாக்களுக்கு காண்பித்தார்.

rakshan
rakshan

ரியோ: இவர் தொகுப்பாளராக இருந்து விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மனைவி சுருதி, ரியோ உடன் இணைந்து ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

rio
rio

மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அட்ராசிட்டி பண்ணும் இவர் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இவருடைய கணவர் ஹுசைன் ஒரு நடன கலைஞராக இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

manimegalai
manimegalai

ஈரோடு மகேஷ்: மேடைப் பேச்சாளராகவும், தொகுப்பாளராகவும் இருக்கும் இவர் விஜே ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது.

magesh
magesh

கோபிநாத்: இவர் நீயா நானா என்ற நிகழ்ச்சியை திறமையாக நடத்தி ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு துர்கா என்ற மனைவியும், வெண்பா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது இவர் சினிமாவிலும் ஒரு சில கேரக்டர்கள் செய்து வருகிறார்.

gopinath
gopinath

பிரியங்கா: விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்களில் அதிக பிரபலமாக இருப்பவர் பிரியங்கா. தனக்கே உரிய ஸ்டைலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இவருடைய சிறப்பு. சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார். சில வருடங்களுக்கு முன் இவர் விஜய் டிவியில் வேலை செய்துவரும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

priyanka
priyanka

Trending News