வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிக்பாஸ் வீடு கேமரா முன் காதலை வெளிப்படுத்திய அருண்.. எக்ஸ் தளத்தில் க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ச்சனா!

Bigg Boss 8: விஜய் டிவியின் அடுத்த நட்சத்திர ஜோடி அமோகமாக ரெடியாகிவிட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்பே அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இரண்டு தரப்பிலுமே இதை உறுதிப்படுத்தும் அளவிற்கு எந்த தகவலையும் கொடுக்கவில்லை.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் அருண் பிரசாத். ராஜா ராணி 2 சீரியலில் வில்லத்தனம் கலந்த காமெடி காட்சிகளில் நடித்து பெரிய அளவில் பெயர் வாங்கியவர் அர்ச்சனா.

கேமரா முன் காதலை வெளிப்படுத்திய அருண்

இருவரும் காதலி இருப்பதாக விஜய் டிவி நட்சத்திரங்களே ஒரு சில நிகழ்ச்சிகளில் கிண்டல் அடித்து வந்தார்கள். அதன் பின்னர் அர்ச்சனா போன சீசனில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டை வாங்கி வெளியேறிய பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்தார்.

யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்களிடையே பெரிய அளவில் பெயர் வாங்கிய டைட்டில் வின்னர் ஆகவும் ஆனார். அவரைத் தொடர்ந்து தற்போது எட்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார் அருண் பிரசாத்.

இந்த நிலையில் அர்ச்சனாவின் பிறந்தநாளுக்காக அருண் பிரசாத் பிக் பாஸ் வீட்டை கேமரா முன்னாடி பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதில் ஹாப்பி பர்த்டே Harley, பத்திரமாக இருங்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிக் பாஸ் கோப்பையுடன் உன்னை வந்து சந்திக்கிறேன், ஐ லவ் யூ என்று சொல்லி இருக்கிறார்.

இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து என்னுடைய பிறந்தநாள் இப்போது தான் முழுமை அடைந்திருக்கிறது, இதற்காக நான் இரவு ஒரு மணி வரை காத்திருந்தேன் என பதிவிட்டு இருக்கிறார் அர்ச்சனா.

Bigg Boos
Bigg Boos

Trending News