செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Baakiyalakshmi serial: பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கேரக்டரை தூக்கிய சம்பவம்.. சன் டிவியை தொடர்ந்து, ஜீ தமிழ் செய்த வேலை

Baakiyalakshmi serial: பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கேரக்டரை தூக்கிய சம்பவம்.. சன் டிவியை தொடர்ந்து, ஜீ தமிழ் செய்த வேலைஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இப்போ சேனல்களுக்குள் நடக்கும் போட்டியால் சின்னத்திரை கலைஞர்களுக்கு படு கொண்டாட்டமாக மாறிவிட்டது. எங்க சேனலுக்கு வாங்க, எங்க சீரியல்ல நடிங்க என போட்டி போட்டு நடிகர்களை வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் குக் டூப் குக் என்று ஒரு நிகழ்ச்சியை சன் டிவி ஆரம்பித்து விட்டது. இதுல என்ன கொடுமை என்றால் விஜய் டிவியின் பல பிரபலங்களை இந்த சேனல் தட்டி தூக்கி விட்டது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் யாருடன் எல்லாம் கூட்டணி அமைத்து காமெடி பண்ணி அது ஹிட் ஆனது அவர்கள் எல்லோரும் இப்போது சன் டிவியில் வந்து விட்டார்கள். ஏற்கனவே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே குக் வித் கோமாளியை விட இந்த நிகழ்ச்சியை பெரிய அளவுக்கு ரீச் அடையும் என்பது தெரிந்து விட்டது.

ஒரு சேனலில் யார் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார்களோ அவர்களை வேறொரு சேனல் அதிக காசு கொடுத்து அழைப்பது வழக்கமான ஒன்றுதான். எதிர்நீச்சல் சீரியல் படு பயங்கரமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் அந்த சீரியலில் முக்கிய புள்ளியாக இருந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்துவை கூப்பிடாத சேனல்கள் கிடையாது.

ஜீ தமிழ் செய்த வேலை

அது மாதிரி தான் இப்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கேரக்டர் ஒருவரை ஜீ தமிழ் சேனல் தட்டி தூக்கி இருக்கிறது. குடும்பப் பெண்கள் கொண்டாடும் சீரியல் ஆக இருப்பது பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் முக்கிய கேரக்டர் தான் ராதிகா.

கோபியின் கல்லூரி காதலி மற்றும் தற்போது இரண்டாவது மனைவியாக இவர் நடித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இந்த கேரக்டரில் முதலில் நடித்தவர் தான் ஜெனிபர். நடன கலைஞரான இவர் பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் ராதிகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் இந்த ராதிகா கேரக்டர் பாஸிட்டிவாக தான் இருந்தது. அதாவது பாக்யா தான் கோபியின் கணவர் என்று தெரிந்த பிறகு அவரிடம் இருந்து விலகிக் கொள்ளும் கேரக்டர் தான். ஆனால் போகப் போக சீரியலின் கதைப்போக்கு மாறுவதால் ராதிகா பாக்யாவுடன் போட்டி போட்டு கோபியுடன் வாழ்வது போல் கதை அம்சம் மாற்றப்பட்டது.

இது போன்ற ஒரு கேரக்டரில் ஜெனிஃபருக்கு நடிக்க விருப்பமில்லை. அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் இவ்வளவு நெகட்டிவ் கேரக்டர் தனக்கு வேண்டாம் என முடிவு செய்து அந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பின்னர் ரேஷ்மா உள்ளே வந்து இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

குழந்தை பெற்று ஓய்வில் இருக்கும் ஜெனிஃபருக்கு ஜீ தமிழ் அவர்களுடைய கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு ரசிகர்கள் அதிகம். இதனால் இவரின் மூலம் அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News