வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நல்லவளா இருக்கலாம் ஆனா கூமுட்டையா இருக்கக் கூடாது.. பாக்யாவை அசிங்கப்படுத்திய சக்காளத்தி

Baakiyalakshmi Serial: எவ்வளவு பட்டாலும் சில ஜென்மங்களை திருத்த முடியாது. அப்படி தான் இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவும் இருக்கிறார். பேரன் பேத்தி எடுக்கிற வயசில் பாக்யாவை விட்டுட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி இப்போது பிசினஸை இழுத்து மூடிவிட்டு நடுரோட்டில் நிற்கிறார்.

இப்போதைக்கு கோபி வேற எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருப்பதால், புதிதாக துவங்க இருக்கும் தன்னுடைய ஹோட்டலுக்கு வேண்டுமானால் மேனேஜராக வந்து வேலை பாருங்கள் என்று பாக்யா சொல்கிறார். உடனே கோபி, ‘உன்னிடம் நான் ஒன்றும் வேலை கேட்கவில்லை. உன்னுடைய ஹோட்டலில் வந்து வேலை பார்க்கும் அளவுக்கு என்னுடைய தரம் தாழ்ந்து போகவில்லை’ என்று கேவலமாக பேசுகிறார்.

அது பத்தாது என்று ராதிகாவிடமும் இந்த விஷயத்தை சொல்ல உடனே ராதிகாவும், ‘உங்களது கரிசனை எங்களுக்கு தேவையில்லை’ என்று முகத்தில் அடித்தது போல் பேசுகிறார். இதையெல்லாம் கேட்டும் பாக்யா கொஞ்சம் கூட கோபப்படாமல், மறுபடியும் கோபிக்கு உதவி செய்யதான் பார்க்கிறார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களுக்கு நடு ரோட்டில் கிடைத்த டோஸ்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோமதி

ராதிகாவிடம் அசிங்கப்பட்ட பாக்யா

பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி அவருக்கு கொடுத்த நகையை எல்லாம் மறுபடியும் திரும்பி கொடுக்கிறார். இந்த நகைகளை வைத்து கோபியை மறுபடியும் பிசினஸ் தொடங்கச் சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை ஏற்க மறுக்கிறார், இருந்தாலும் வலுக்கட்டாயமாக பாக்யா அந்த நகைகளை எல்லாம் அவரிடமே கொடுத்து விட்டு செல்கிறார்.

ஒருவர் நல்லவராக இருப்பது தப்பு கிடையாது, ஆனால் கூமுட்டையாக இருப்பதுதான் அடி முட்டாள்தனம். அப்படி தான் பாக்யா இப்போது நடந்து கொள்கிறார். தங்கி இருக்கும் வீட்டிற்கு காசு கொடுக்கும்படி பாக்யாவை கோபி ரொம்பவே டார்ச்சர் செய்தார். அதோடு மூன்று பிள்ளைகளையும் அம்போன்னு விட்டுட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டதை எல்லாம் மறந்துட்டியா பாக்யா! என்று இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்க்கின்றனர்.

Also Read: முத்துவின் அப்பாவால் ரோகிணியின் முகத்திரை கிழியும் நேரம் வந்தாச்சு.. விஜயா வைக்க போகும் செக்

Trending News