வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டிஆர்பிக்காக கெஞ்சி கூத்தாடிய விஜய் டிவி.. கோபி எடுத்த அதிரடி முடிவு

கடந்த சில மாதங்களாகவே விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமே. இந்த சீரியலால்தான் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகிறுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் ஆணிவேராக இருக்கக்கூடிய கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ், அந்த சீரியலில் இருந்து விலகுவதாக சோசியல் மீடியாவில் வெளியிட்ட வீடியோ வைரலானது.

கோபியின் கேரக்டர் என்னதான் எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் இவருடைய நகைச்சுவை மற்றும் டெரர் கலந்த கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே இந்த சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமல்ல ஆண்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது சதீஷ் சீரியலில் இருந்து விலகினால் இந்த சீரியலை பார்ப்பதையே நிறுத்தி விடுவோம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

Also Read: முழு பைத்தியமாக மாறிய ராதிகா.. அம்மு குட்டினு கொஞ்சிட்டு அசிங்கப்பட்ட கோபி

சதீஷ் இந்த சீரியலில் இன்னும் 10  எபிசோடுக்கு மட்டுமே வருவார் என அவரே அளித்த வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள சில பிரச்சனைகள் தான் என்றும் விளக்கம் அளித்தார். இதனால் ஆடிப் போன விஜய் டிவி சதீஷிடம் கெஞ்சி கூத்தாடி இந்த சீரியலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டது.

அப்படியும் சதீஷுக்கு இனி கோபியின் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லிவிட்டார். அதன் பிறகு ரசிகர்கள் பலரும் சதீஷிக்கு தனிப்பட்ட முறையில் கெஞ்சி கேட்டுக் கொண்டனர். இதனால் அந்த சீரியலில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொண்டதாக சதீஷ் திடீரென்று அறிவித்துள்ளார். இதனால் சின்னத்திரை ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

Also Read: பாக்கியாவை படாத பாடுபடுத்தும் ராதிகா.. ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி நடிக்கும் கோபி

மேலும் பாக்கியலட்சுமி சீரியலின் கோபியின் கதாபாத்திரம் அப்பாவித்தனமும் வில்லத்தனமும் கலந்த ஒரு வித்தியாசமான கேரக்டர். இந்த கேரக்டரில் இதுவரை கச்சிதமாக நடித்த சதீஷ், தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அப்படி இருக்கும் போது அவரை அவ்வளவு சீக்கிரம் விஜய் டிவி சீரியலில் இருந்து விலக விட்டு விடாது. ஒரு வழியாக கெஞ்சி கூத்தாடி அவருடைய முடிவை மாற்றி மறுபடியும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வைத்துள்ளனர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டு மனைவிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை வெறுத்து பாக்யாவிடம் வந்து சேர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.

Also Read: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

Trending News