புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக் பாஸ் 5-வது சீசனில் வனிதாவை மிஞ்சும் 2 நடிகைகள்.. ரைட்டு தரமான சம்பவம் இருக்கு.!

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பொழுது போக்கிற்கும், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளது. அதன் விளைவாக இதுவரை நான்கு சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நான்கு சீசனிலும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியது நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஐந்தாவது சீசனிலும் கமல் தொகுத்து வழங்க உள்ளார். அண்மையில் அவரை வைத்து  பிக் பாஸ் குழுவினர், புரோமோஷனல் வீடியோவை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிவடையும். ஆனால் சென்ற வருடம் கொரோனா தாக்கத்தினால் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவடைந்தது. அதேபோன்று பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியையும் அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன்5 போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து உறுதிப்படுத்தும் நிலையில் பிக்பாஸ் குழுவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் நடிகையாகவும் திகழும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் பிக் பாஸ் சீசன் 5 வில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆகையால் ‘இந்த சீசனில் கண்டிப்பாக இரண்டு சம்பவம் இருக்கு’ என்று நெட்டிசன்கள் அவர்களது புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களை தட்டி விடுகின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் அதிகமாக இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே யார் யார் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பங்கேற்க போகின்றார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எனத் தொடங்கி உள்ளது. பிக் பாஸ் சீசன்5 போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News