வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் கத்தையா கொடுத்தாரா ஒத்தையா கொடுத்தாரா.? 18 போட்டியாளர்களின் சம்பள விவரம், முதலிடத்தில் இருப்பது யார்.?

Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ளது. ஷோ தொடங்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது நாளான இன்று சண்டை கைகலப்பு என விறுவிறுப்பாக மாறி உள்ளது.

ஆனால் இது ப்ரோமோவில் மட்டும்தான் எபிசோட் கொஞ்சம் மொக்கையாக தான் செல்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள 18 போட்டியாளர்களின் சம்பள விவரம் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

இதற்கு முந்தைய சீசன்களை பொறுத்தவரையில் ரொம்பவும் பிரபலமானவர்களுக்கு ஒரு லட்சம் வரையில் கூட சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சீசனில் 50 ஆயிரத்தை தாண்டவில்லை என்பதே அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

அதிகபட்ச சம்பளம் யாருக்கு.?

அப்படி என்றால் மிகப்பெரிய பிரபலங்கள் யாரும் இல்லை என்றுதானே அர்த்தம். அதுதான் உண்மையும் கூட. அதன்படி தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு ஒருநாள் சம்பளமாக 50,000 பேசப்பட்டு இருக்கிறது.

மேலும் தீபக் மற்றும் சாச்சனாவுக்கு ஒரு நாளைக்கு 30,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் ரீல் மகளுக்கு மகாராஜா படத்தால் இந்த சம்பளம் கிடைத்திருக்கிறது.

இவர்களுக்கு அடுத்தபடியாக விஜய் டிவி தங்களுடைய சேனலில் இருந்து ஒரு பெரும் பட்டாளத்தை வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர். அதன்படி அருண், அர்னவ், சத்யா, விஜே விஷால், பவித்ரா, ஜாக்குலின், சுனிதா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, அன்ஷிதா ஆகியோருக்கு 20ல் இருந்து 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இவர்களை தொடர்ந்து முத்துக்குமரன், சௌந்தர்யா, ஆனந்தி மற்றும் ஜெப்ரி ஆகியோருக்கு ஒரு நாள் சம்பளமாக 10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த 18 போட்டியாளர்களும் பிக் பாஸ் டைட்டிலை வெல்வதற்காக களம் இறங்கி உள்ளனர்.

Trending News