கூத்தாடின்னு சொல்றதுல நாங்க பெருமைப்படுறோம்.. விஜய்க்கு சப்போர்ட் செய்த பிக்பாஸ் பிரபலம்

Vijay: அரசியல் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து விஜய் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு முன்பு அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவரை பலரும் கூத்தாடி என்ற ஒரு வார்த்தையை சொல்லி விமர்சிக்கின்றனர். சமீபத்தில் அவர் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடத்தி இருந்தார்.

அப்போது கூட நான் கூத்தாடி தான் என இந்த விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார். இருப்பினும் சமீபத்தில் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் விஜய்யை அதே வார்த்தையை கூறி விமர்சித்தார்.

இதற்கு திரையுலகில் இருந்து பெரிய அளவில் எதிர்ப்புகள் வரவில்லை. ஆர்வி உதயகுமார், பேரரசு என வெகு சிலர் மட்டும் தான் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய்க்கு மறைமுகமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார் ரட்சிதா மகாலட்சுமி .பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய திரையில் இவர் பிஸியாகிவிட்டார்.

விஜய்க்கு சப்போர்ட் செய்த நடிகை

தற்போது அவர் கைவசம் தமிழ் தெலுங்கு கன்னடம் என ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்கள் கூத்தாடி என்ற வார்த்தை பற்றி கேள்வி எழுப்பினர்.

உடனே அவர் அது ஒன்றும் தவறான வார்த்தை கிடையாது. ரொம்பவும் நல்ல வார்த்தை. சில தேவை இல்லாதவர்கள் இப்படி மாற்றிவிட்டார்கள்.

கூத்தாடின்னு சொல்லிக்கிறதுல நாங்க பெருமைப்படுகிறோம். கூத்தாடியாவே இருப்போம் கூத்தாடியாவே ஜெயிப்போம் என தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக முன் வைத்துள்ளார்.

உடனே செய்தியாளர் நீங்கள் விஜய்க்கு சப்போர்ட் செய்கிறீர்களா என கேட்டதற்கு சிரித்தபடி மழுப்பி விட்டார். இருப்பினும் அவர் கூறியதை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment