சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்ட விஜய் டிவி பிரபலம்.. நேரில் கூட பேசாமல் அசிங்கப்படுத்திய சம்பவம்

Actor Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் இப்போது சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். சின்னத்திரையில் இருந்து வந்ததால் அவரை முன்னுதாரணமாக வைத்து நிறைய பிரபலங்கள் இப்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கி வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் டாப் 5 நடிகர்களின் இடங்களிலும் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டு விஜய் டிவி பிரபலம் ஒருவரிடம் நேரில் கூட அவர் பேசவில்லையாம். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் பிளாக் பாண்டி. சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர் வெள்ளிதிரையில் சாட்டை, ஜில்லா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் இருந்த போது சிவகார்த்திகேயனுடன் பிளாக் பாண்டி நெருக்கமாக பழகி இருந்துள்ளார். இதன் காரணமாக ஒரு விழாவில் சிவா என்ற பிளாக் பாண்டி அழைத்து பேச முற்பட்டு இருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயன் தனது மேனேஜரை அழைத்து 20 ஆயிரம் பணத்தை பிளாக் பாண்டி இடம் கொடுக்க சொல்லி இருக்கிறாராம்.

Also Read : மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

அப்போது பிளாக் பாண்டி என்னுடைய உடல் நன்றாக இல்லை என்றால் இந்த பணத்தை வாங்கிக் கொள்வேன். நான் இப்போது நன்றாக தான் இருக்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் முன்னேறுவேன் என்று கூறுகிறார்.
மேலும் அவரது அருகில் பாண்டியின் அம்மாவும் உடன் இருந்த நிலையில் இந்த பணம் தங்களுக்கு வேண்டாம் என்று சிவா கொடுத்ததால் 20 ரூபாய் போதும் என்று அதிலிருந்து எடுத்துக் கொண்டாராம்.

மேலும் மேனேஜர் போய் சிவகார்த்திகேயனிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதன் பிறகு தன்னை சிவா அழைத்து பேசவில்லை என்ற பிளாக் பாண்டி பேட்டி கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு பிறர் வாய்ப்பு கொடுத்தாலும் தன்னுடைய திறமையால் தான் இவ்வாறு வளர்ந்து நிற்கிறார். அவரை இந்த விஷயத்தில் குறை கூறுவது தவறு என பிளாக் பாண்டி கூறியதற்கு எதிராக சில கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தவறவிட்ட விஜய் டிவி.. போட்டி போட்டு களமிறங்கும் இரண்டு புது சீரியல்கள்