சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நயன் விக்கி காதலுக்கு காரணமே எக்ஸ் லவ்வர் தானாம்.. பெருமை பீத்திக் கொள்ளும் விஜய் டிவி பிரபலம்

Nayanthara-Vignesh Shivan: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் திருமணம் ஆன சில மாதங்களிலேயே வாடகை தாயின் மூலம் இரண்டை குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் அவரது குடும்ப புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு வருகிறார்.

இந்நிலையில் நயன், விக்கி காதல் முளைக்க காரணமாக இருந்த படம் நானும் ரவுடிதான். நயன்தாரா சிம்பு, பிரபு தேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளை சந்தித்த நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். இனி தனக்கு எல்லாமே சினிமா தான் என்று முடிவெடுத்து கடுமையாக உழைத்து நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டார்.

அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது காட்டிய அன்பு அவருக்கு மிகவும் பிடித்த போக இருவரும் காதலித்து வந்தனர். இந்த சூழலில் இவர்களின் காதலுக்கு காரணமாக இருந்தது பிரபுதேவா தான் என விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் உதய பாணு.

இப்படி சொன்னால் பலருக்கும் யார் என்று தெரியாது. ராகுல் தாத்தா என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வந்திருக்கும். அதாவது நானும் ரௌடி தான் படத்தில் இவர் ராகுல் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதிலிருந்து ராகுல் தாத்தா என்று தான் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் சாயல் மற்றும் நடவடிக்கை எல்லாமே பிரபுதேவா போல் இருப்பதாக ராகுல் தாத்தாவிற்கு எண்ணம் வந்துள்ளது. இதை நேரடியாகவும் விக்னேஷ் சிவனிடம் கூறி உள்ளாராம். நயன்தாராவிடமும் விக்னேஷ் சிவனை பார்க்கும்போது பிரபுதேவா போல் உள்ளார் என்று ராகுல் தாத்தா கூறினாராம்.

இதனால் தான் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் வந்துள்ளது. ஆகையால் இவர்களின் காதலுக்கு அடித்தளம் போட்டது நான்தான் என ராகுல் தாத்தா பெருமையாக பேசி வருகிறார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இது என்ன புது உருட்டாக இருக்கிறது என ராகுல் தாத்தாவை கலாய்த்து வருகிறார்கள்.

Trending News