சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சிவகார்த்திகேயனுடன் எனக்கு செட் ஆகல.. மரியாதையே இல்ல, பகிர் கிளப்பிய விஜய் டிவி தொகுப்பாளினி

Actor Sivakarthikeyan : ஒரு காலத்தில் ரியாலிட்டி ஷோ என்றால் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளே கிடையாது. ஏனென்றால் வித்தியாசமான நிகழ்ச்சி மற்றும் அதை அழகாக கொண்டு செல்லும் தொகுப்பாளர்கள் என பல சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தது. இந்த சூழலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக சிறிது காலம் பணியாற்றியவர் தான் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் செட்டே ஆகவில்லை என பிரபல விஜே ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது விஜய் டிவியில் டிடி, பாவனா, பிரியங்கா, ரம்யா போன்றோர் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கின்றனர். இதில் பலர் இப்போது விஜய் டிவியில் பணியாற்றாமல் இருக்கின்றனர்.

அதில் கடந்த 2017 இல் இருந்து விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையுமே விஜே பாவனா தொகுத்து வழங்கவில்லை. இது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. எங்குமே பெண்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை. அவர்களது திறமைக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பதற்காக விலகியதாக கூறியிருந்தார்.

Also Read : கதி கலங்கி போய் எல்லா தயாரிப்பாளர்களும் போடும் எண்டு கார்டு.. வாலைச்சுருட்டி கொண்டு கப்சிப் ஆன சிவகார்த்திகேயன்

அதோடு விஜய் டிவி பிரபலங்கள் பற்றி பேசி வந்த பாவனா சிவகார்த்திகேயனுடன் தனக்கு செட்டாகவில்லை என்று கூறியிருந்தார். அதாவது பாவனா தொகுப்பாளினியாக இருந்தபோது கண்டஸ்டண்டாக சிவகார்த்திகேயன் இருந்தார். அதன் பிறகு பாவனா, சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

மேலும் அவர்களுக்குள் சரியான பழக்கம் இல்லாததால் எங்களுக்குள் சிங்க் ஆகவில்லை. ஆனால் மாகாபாவுக்கும் தனக்கும் நன்றாக செட் ஆகி விட்டது. கெஸ்ட் யார் வந்தால் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பேசி வைத்துக் கொள்வோம். அதுவும் மாகாபா டைமிங்கில் பிச்சு உதறுவார் என பாவனா புகழ்ந்து பேசியிருந்தார்.

Also Read : வாய்ப்பு தராத விஜய்.. பழிவாங்க சிவகார்த்திகேயனை வேற லெவலில் உருவாக்கும் இயக்குனர்.

Trending News