திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

கடந்த வாரம் முழுவதும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி, முக்கியத்துவம் கொடுத்து பார்த்திருக்கின்றனர் என்பது அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்தவகையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் சன் டிவியின் புத்தம்புது சீரியல் ஒன்று விஜய் டிவியின் சீரியல்களை பின்னுக்குத் தள்ளி ஆச்சரியப்படுத்தியுள்ளது

வழக்கம்போல் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரமும் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து முதலிடத்தை மீண்டும் தக்க வைத்திருக்கிறது. 2-வது இடம் பாசமான அண்ணன் தங்கையின் கதையான வானத்தைப்போல சீரியலுக்கும், கட்டிய கணவர் ஒதுக்கினாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சுந்தரி சீரியலுக்கு 3-ம் இடமும் கிடைத்திருக்கிறது.

Also Read: புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

4-வது இடம் தந்தையிடம் கிடைக்காத பாசத்தை கணவரின் மூலம் பெரும் கதாநாயகியின் போராட்டமான வாழ்க்கையைக் காட்டும் கண்ணான கண்ணே சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 6-வது இடம் இந்த காலத்திலும் பெண்களை அடிமைகளாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு எப்படி பதிலடி கொடுக்கவேண்டும் என்பதை காட்டிக் கொண்டிருக்கும் சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

இப்படித் தொடர்ந்து டாப் 6 இடங்களை பிடித்திருக்கும் சன் டிவி மற்ற எந்த சேனல்களையும் உள்ளே விடாமல் டிஆர்பி மாஸ் காட்டியிருக்கிறது. 7-வது இடம்தான் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு கிடைத்துள்ளது. 8-வது இடம் பாக்கியலட்சுமி பெற்றுள்ளது.

Also Read: 2 படங்களோடு காணாமல் போன சன்டிவியின் செல்லப்பிள்ளை.. வேறு கோணத்தில் வடிவேலுவை காட்டிய இயக்குனர்

பாக்கியலட்சுமி சீரியல் முன்பு சன் டிவியின் டாப் சீரியல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக இருந்த நிலையில், தற்போது அதில் விறுவிறுப்பு குறைந்ததால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதுமட்டுமில்லாமல் 9-வது இடம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்ட புத்தம் புது சீரியல் ஆன சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியல் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி-யில் டாப் 10 லிஸ்டில் இடம் பெற்று விஜய் டிவியின் சீரியல்களை பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறது. ஆனந்த ராகம் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 10-ம் இடம் கிடைத்திருக்கிறது.

Also Read: டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்.. முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

Trending News