Chinna Marumagal: விஜய் டிவி சின்ன மருமகள் சீரியலில் மறு வீடு வைபவம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் சேதுவின் நல்ல மனசை பார்க்கும் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார்.
இதில் நாளை வர இருக்கும் எபிசோட் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி இன்றைய எபிசோடில் தமிழ் தன் தங்கை மற்றும் தோழிகளுடன் பாண்டி விளையாட்டு விளையாடுகிறார்.
தேவர்மகன் கமலாக மாறிய சேது
அதை சேது ரசித்து பார்க்கிறார். அதன் பிறகு அவரும் பெண்களுடன் இணைந்து விளையாட ஆரம்பிக்கிறார். அப்போது அந்த ஊரில் இருக்கும் இளவட்டங்கள் அவரை கிண்டல் செய்கின்றனர்.
அது மட்டும் இன்றி பெண்களின் தாவணியை போட்டுக் கொள்ள வேண்டியது தானே என மோசமாக விமர்சிக்கின்றனர். இதனால் நம்ம ஹீரோவுக்கு கோபம் வந்து விடுகிறது. வழக்கமாக சினிமாக்களில் நடக்கும் காட்சி தான் இது.
அந்த வகையில் அவர் தன்னை கேலி பேசியவர்களுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க தயாராகிறார். அதன்படி தேவர் மகன் கமல் போல் அவர் கம்பு சுத்தும் எபிசோட் தான் நாளை வர இருக்கிறது.
வழக்கமாக விஜய் டிவியில் இப்படித்தான் சினிமாவில் வரும் காட்சிகளை சுட்டு விடுவார்கள். அப்படித்தான் தற்போது சின்ன மருமகள் சீரியலில் தேவர் மகன் காட்சி காப்பியடிக்கப்பட்டுள்ளது.