சனிக்கிழமை, மார்ச் 15, 2025

குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

Big Boss Season 7 Update: சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை இந்த முறை தேர்வு செய்ய வேண்டும் என விஜய் டிவி வலை வீசி தேடி வருகிறது. அதிலும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருந்த மூன்று ஜோடிகளை குறி வைத்துள்ளனர்.

ஏனென்றால் இதற்கு முன்பு பிக் பாஸ் சீசன் 2-வில் பாலாஜியையும் அவரது மனைவி நித்யாவையும் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே விட்டு டிஆர்பி-ஐ ஏற்றிக்கொண்டனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒன்று சேர்வார்கள் என நினைத்தால், அவர்களது குடும்ப பிரச்சனை மேலும் பெரிதாகி போலீஸ் கேஸ் வரை சென்றது. அதேபோலவே இன்னும் மூன்று ஜோடிகளை விஜய் டிவி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப பார்க்கிறது.

ரட்சிதா மகாலட்சுமி – தினேஷ்: கடந்த சீசனில் கலந்து கொண்ட சீரியல் நடிகை ரட்சிதா அவருடைய கணவருடன் தற்போது கருத்து வேறுபாட்டில் இருக்கிறார். இருவரும் பிரிந்து வாழும் நிலையில், ஏற்கனவே ரட்சிதாவை வைத்து ஏதாவது செய்யலாமா என பார்த்த விஜய் டிவிக்கு எதிர்பார்த்த அளவு சுவாரசியம் கிடைக்காததால், இந்த முறை அவருடைய கணவர் தினேஷ் உள்ளே அனுப்ப பார்க்கின்றனர்.

நிச்சயம் தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் ரட்சிதாவை பற்றி ஏடாகூடமாக நிறைய விஷயத்தை அவிழ்த்துவிட்டு பல பிரச்சனைகள் கிளம்புவதற்கு காரணமாக அமையும். இதனால் அவர்களது டிஆர்பி-யும் எகிறும் என நினைக்கின்றனர்.

Also Read: வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்

VJ பிரியங்கா- பிரவீன் குமார்: விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான VJ பிரியங்காவும் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டு இறுதிவரை சென்றவர். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவருடைய கணவரை பற்றி எதுவும் சொல்லவில்லை. பிரியங்காவின் கணவர் பிரவீன் குமாரும் பிக் பாஸ் தயாரிப்பு குழுவில் இருப்பதால் அந்த வீட்டில் அவரை பற்றி பேச முடியாமல் போனது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா தன்னுடைய கணவருடன் சேர்ந்து இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. ஏனென்றால் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் முன்பெல்லாம் கணவரை பற்றி அடிக்கடி பேசுவார். ஆனால் இப்போது அவரைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். இதனால் இவர்களுக்கிடையே என்ன பஞ்சாயத்து என்பதை பிக் பாஸ் வீட்டில் அவிழ்த்து விட வேண்டும் என விஜய் டிவி பிரவீன் குமாரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Also Read: பிக் பாஸ் சீசன் 7 எப்போது தெரியுமா.? 50 கோடி சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி

சம்யுக்தா- விஷ்ணுகாந்த்: விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஜோடியாக நடித்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் இருவரும், அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் ஆன 15 நாட்களில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விட்டனர்.

ஆனால் இவர்களது பிரிவுக்கு இருவரும் சோசியல் மீடியாவில் சொன்ன காரணங்கள் கேட்கவே காது கூசும் அளவுக்கு இருந்தது. இதனால் செம ட்ரெண்டான இந்த ஜோடியையும் பிக் பாஸ் வீட்டில் விட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் விஜய் டிவி திட்டவட்டமாக இருக்கிறது.

Also Read: தளபதி கேரியரில் நோட் பண்ண வேண்டிய முக்கியமான விஷயம்.. 6 பாலிவுட் நடிகைகளை அறிமுகப்படுத்திய விஜய்

Trending News