விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. காரசாரமான சமையலை நகைச்சுவையுடன் தரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் குக் வித் கோமாளி சீசன் 3 புரோமோ வெளியாகி இருந்தது. தற்போது இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளின் பெயர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றவர் கிரேஸ். பாடகியான கிரேஸ் நடிகர் கருணாஸின் மனைவி. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளார். இவரைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா கலந்து கொள்கிறார்.
நாட்டுப்புற இசைக் கலைஞர் அந்தோணி தாஸ் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற உள்ளார். இவரை தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான வில்லன் சந்தோஷ் பிரதாப் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நீதானே பொன்வசந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் வித்யுலேகா. நகைச்சுவை நடிகையான இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 இல் கலந்து கொள்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிவாங்கி, பரத், மூக்குத்தி முருகன் ஆகியோர் கோமாளியாக பங்கு பெறுகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற குரேஷி மற்றும் பாலா கோமாளிகளாக உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுனிதா. மற்ற சீசன்கள் போலவே எந்த சீசனிலும் சுனிதா கோமாளியாக பங்கு பெறுகிறார். தொகுப்பாளினி மணிமேகலைக்கு சென்ற சீசனில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீசனிலும் கோமாளியாக கலந்து கொள்கிறார்.
கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. புகழுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் படங்களில் பிஸியாக உள்ளார். அதனால் இந்நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு எபிசோடில் புகழ் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கலாம்.