வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்.. ஷெரினை விட அதிகமாக வாங்கும் மைம் கோபி

சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி, இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களுடன் கோமாளிகள் செய்யும் ரகளை பார்ப்போரை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் உள்ளனர். இந்த நிகழ்ச்சி
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளிவந்துள்ளது.

Also Read: மில்க் பியூட்டி ஹன்சிகாவிற்கே டஃப் கொடுத்த தர்ஷா குப்தா.. மார்டன் வரிக்குதிரையாக மாறிய கவர்ச்சி புகைப்படங்கள்

சீசன் 3ல் கோமாளியாக இருந்து தற்போது குக்காக மாறி இருக்கும் சிவாங்கி ஒரு எபிசோடுக்கு மட்டும் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த நடிகர் ராஜ் ஐயப்பனுக்கு ஒரு எபிசோடுக்கு 26 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவரைத் தொடர்ந்து அழகாக தமிழ் பேசும் பிரெஞ்சு நடிகை ஆண்ட்ரியா ஒரே ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த விஜே விஷாலுக்கு 25 ஆயிரம் கொடுக்கின்றனர்.

Also Read: கோலிவுட்டின் ஒஸ்ட் டைரக்டர்களை பட்டியலிட்ட கிளாமர் நடிகை.. சகிலாவுடன் அளித்த வைரல் பேட்டி

நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரம் வழங்கப்படுகிறது. 90களில் கிளாமர் நடிகையாக இடுப்பு மடிப்பை காட்டி இளசுகளை திணறடித்த நடிகை விசித்ரா ஒரு எபிசோடுக்கு மட்டும் 30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். மேலும் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் 35 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு மெட்ராஸ், கதகளி, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மைம் கோபி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். இவர்தான் சீசன் 4 நிகழ்ச்சியில் இருக்கும் பிரபலங்களில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

Trending News