புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் டிவியை அட்ட காப்பி அடித்து சன் டிவி தொடங்கும் 2ம் பாகம்.. அவசர அவசரமாக முடிவுக்கு வரும் நாடகம்

Vijay tv Sun Tv: பொதுவாக சேனல்களின் டிஆர்பி ரேட் அவர்கள் ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை வைத்தே தீர்மானிக்கப்படும். முக்கியமாக சீரியல்கள் தான் சேனல்களின் அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. அதில் சன் டிவி எப்பொழுதுமே டாப்ல தான் இருக்கிறது.

அதே நேரத்தில் விஜய் டிவியில் வரும் நாடகங்கள் ஏதாவது சரியாக ஓடவில்லை என்றால் அந்த பாகத்தை அப்படியே நிறுத்திவிட்டு அதனுடைய இரண்டாம் பாகமாக புது அத்தியாயங்களை வைத்து எடுக்கப்பட்டு வரும். அந்த வகையில் ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணம்மா, இன்னும் பல சீரியல்கள் வந்திருக்கிறது.

Also read: வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

தற்போது இவர்களை காப்பியடிக்கும் விதமாக சன் டிவியும் ஒரு சூப்பர் ஹிட் நாடகத்தை அவசர அவசரமாக முடிக்க ஏற்பாடு நடக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாம் பாகத்தினை புது பொலிவுடன் ஒளிபரப்பு செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பித்த சுந்தரி நாடகம் அனைவராலும் பார்க்கப்பட்ட சீரியலாக இருந்தது.

தன்னுடைய கருமையான உடல் தோற்றத்தினால் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து விட்டு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வந்தார். ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு திருமணம் நடந்து விட்டது. ஆனால் திருமணம் ஆன கார்த்திக்கு சுந்தரியே பிடிக்காமல் அணுவை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

இந்த உண்மை பல வருடங்களாக தெரியாமல் இருந்த அணுவுக்கு தற்போது குழந்தை பிறந்த பிறகு அனைத்து உண்மைகளும் தெரிந்து விடுகிறது. இதனால் கோபத்தில் யாரும் என்னை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். அடுத்தபடியாக சுந்தரி நினைத்தபடி ஐஏஎஸ் ஆகி விடுகிறார். இந்த கதையுடன் சுந்தரி சீரியலை முடித்துவிட்டு. அடுத்ததாக இரண்டாம் பாகமாக புத்தம்புது பொலிவுடன் கூடிய விரைவில் வர இருக்கிறது.

அதாவது அனுவிற்கு பிறந்த குழந்தை, சுந்தரி ஐஏஎஸ் வாழ்க்கை மற்றும் கார்த்தியின் நிலைமை இவைகளை வைத்து வரப்போகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் சன் டிவியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே சுந்தரி சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டு வருகிறது.

Also read: விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

Trending News