வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சந்தி சிரிக்க வைத்த விஜய் டிவி ஜோடி.. இப்படி ஒரு மானங்கெட்ட காதல் கல்யாணம் தேவையா

காதல பத்தி உருகி உருகி வசனம் பேசுறது எல்லாம் சினிமாவில் மட்டும் தான். நிஜ வாழ்க்கையில் காதலாவது, கத்திரிக்கையாவது என யோசிக்க வைக்கும் விஷயங்கள் தான் இப்போது நடந்து வருகிறது. உண்மையான காதலோடு இல்லறத்தில் இணையும் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருக்கிறார்கள்.

ஆனால் எதற்காக காதலித்தோம், எதற்காக கல்யாணம் செய்து கொண்டோம் என்றே தெரியாமல் பாதியிலேயே பிச்சுகிட்டு போன ஜோடிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் பலரையும் வாயடைக்க வைத்த ஜோடி தான் சம்யுக்தா, விஷ்ணு இருவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த போது இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

Also read: எல்லையே மீறிய கதிர்.. அவமானப்பட்ட ஞானம், சக்தியை காப்பாற்றிய கௌதம்

அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்த ஜோடி கோலாகலமாக திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் ஒரு மாத காலம் கூட சேர்ந்து வாழாத இந்த ஜோடி இப்போது மாறி மாறி ஒருவரை பற்றி ஒருவர் புகார் கூறி வருகின்றனர். அதிலும் இவர்கள் இப்போது விவாகரத்துக்கு செல்ல இருப்பதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களின் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் கசிந்து வந்த நிலையில் விஷ்ணுகாந்த் சில நாட்களுக்கு முன் தன் மனைவியைப் பற்றி பல புகார்களை அடுக்கினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தாவும் நேரலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்ணீர் விட்டு பல சமாச்சாரங்களை புட்டு புட்டு வைத்தார்.

Also read: மூர்த்தியின் அருமையை புரிந்து கொள்ளும் ஜீவா.. அண்ணன் அண்ணியை விட்டுக் கொடுக்காத கதிர்

தற்போது இந்த விஷயம் தான் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. திருமணமான புதிதில் இது போன்ற பல பிரச்சனைகள் குடும்பத்திற்குள் வர தான் செய்யும். அதிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு குடும்ப வாழ்க்கை முன்னுக்கு பின் முரணாகத்தான் இருக்கும். அதை எல்லாம் இப்படியா சந்தி சிரிக்க வைப்பது என இருவரை பற்றியும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சம்யுக்தா, எனக்கு 22 வயசு தான் ஆகுது அவரை விட 10 வயசு சின்ன பொண்ணு என்று அனுதாபம் வர வைக்கும் வகையில் பேசுவது கொஞ்சம் ஓவர் தான். இதெல்லாம் இப்பொழுதுதான் தெரிகிறதா, கல்யாணத்திற்கு முன் தெரியாதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. அதுமட்டுமின்றி அந்தரங்க விஷயங்களை கூட இப்படி போட்டு உடைப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Also read: பிரபல சின்னத்திரை ஜோடி விவாகரத்து?.. சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்த ஜோடி!

அந்த வகையில் இருவருமே சிறு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி கொண்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் இவர்களின் காதல் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பது இதிலேயே தெரிகிறது. இப்படி ஒரு மானங்கெட்ட காதலுக்கு கல்யாணம் ஒரு கேடா என்ற விமர்சனங்களும் தற்போது எழுந்து கொண்டிருக்கிறது. போகப் போக இந்த ஜோடி இன்னும் என்னென்ன ரகசியத்தை அம்பலப்படுத்த போகிறார்களோ தெரியவில்லை.

Trending News