வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உருவ கேலி, பகிரங்க கொலை மிரட்டல்.. அத்துமீறி பேசிய நிக்சன், டிஆர்பிக்காக மட்டமாக உருட்டும் விஜய் டிவி

Biggboss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் எல்லை மீறி நடந்து கொள்வது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதில் பிரதீப்பின் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது.

அந்த பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது நிக்சன் விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எப்போதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த முறை ஒரு போட்டியாளர் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தும் கூட விஜய் டிவி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

அதன்படி நிக்சன் அர்ச்சனாவை மூஞ்ச பாரு, பொண்ணா நீ, கள்ளிப்பால் ஊத்தி கொன்றுக்கணும், கருமம், போடி, சொருகிடுவேன் என வரம்பு மீறி பேசினார். இதில் உருவகேலி மட்டுமல்லாமல் கொலை மிரட்டலும் இருப்பதை பார்த்த ஆடியன்ஸ் அதிர்ந்து தான் போனார்கள்.

Also read: கேவலமான கெட்ட வார்த்தை பேசி வசமாக சிக்கிய பூர்ணிமா.. ரவுண்டு கட்டி அடித்த மணி, விஷ்ணு

என்னதான் கோவம் வந்தாலும் வார்த்தையில் கவனம் வேண்டாமா? இப்படிப்பட்ட ஒருவரை இன்னும் எதற்காக நிகழ்ச்சியில் வைத்திருக்கிறார்கள்? அப்படி என்றால் டிஆர்பி தான் முக்கியமா என பல கேள்விகள் இப்போது விஜய் டிவிக்கு எதிராக எழுந்து வருகிறது.

உண்மையில் இந்த விவகாரம் ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு சர்ச்சையானது தான். ஆனால் விஜய் டிவி நாளை கமல் வரும்போது இதை பற்றி பேசி டிஆர்பியை இன்னும் அதிகரித்துக் கொள்ளலாம் என்று பிளான் போட்டிருக்கிறது. அதன் காரணமாகவே நிக்சனை அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் மன உளைச்சலை தான் கொடுக்கிறது. அதனாலயே கலாச்சார சீரழிவாகவும் இந்த ஷோ பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் கடும் வெறுப்பை சம்பாதித்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஊத்தி மூடினால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Also read: விசித்ராவை நிக்க வச்சி கேள்வி கேட்ட அர்ச்சனா.. பேச முடியாமல் தவிக்கும் டம்மி மம்மி

Trending News