செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸ் சீசன் 6-க்கு உறுதியான முதல் விவாகரத்து போட்டியாளர்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய விஜய் டிவி

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும்தான். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்டது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை விஜய் டிவி இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது.

பொதுவாகவே விஜய் டிவி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நபர்களைத்தான் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கும். அதிலும் மீடியாவில் கண்டபடி சண்டை போட்டு பிரபலமாகும் நபர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு சர்ச்சையான நபரைத்தான் விஜய் டிவி தற்போது முதல் போட்டியாளராக தேர்ந்தெடுத்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே அவர் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய இந்த இரண்டாவது திருமணம் குறித்து அவருடைய முதல் மனைவி மோனிகா பல விமர்சனங்களை முன்வைத்தார். 12 வருட திருமண வாழ்வை சுலபமாக மறந்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த இமானுக்கு எதிராக அவர் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.

அதுமட்டுமல்லாமல் நானும் இரண்டாவது திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று அதிரடியாக கூறினார். இப்படி மாறி மாறி ட்வீட் போட்டு சோசியல் மீடியாவை அவர் பரபரப்பாகி வருகிறார். அவரைத்தான் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்றுதான் விஜய் டிவி தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி நித்யாவையும் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு டிஆர்பியை எகிற செய்தது. அந்த வரிசையில் தற்போது மோனிகாவும் இணைந்துள்ளார். எது எப்படி இருந்தாலும் தற்போது விஜய் டிவி தன்னுடைய வேலையை கரெக்டாக செய்துள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News