வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கொடி கட்டி பறக்கும் விஜய் டிவி.. முதல் 6 இடத்தைப் பிடித்த டாப் சீரியல்கள்

TRP Rating Top 6 Serials: ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல்கள் மக்களின் பேராதரவை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம். பொதுவாக சன் டிவி சீரியல்தான் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் கடந்த சில வாரங்களாக சன் டிவியை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளி விஜய் டிவி முன்னுக்கு வந்து விட்டது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி பார்க்கலாம்.

வானத்தைப்போல: கிட்டத்தட்ட 1100 எபிசோடு தாண்டிய நிலையில் அண்ணன் தங்கையின் பாச போராட்டங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளும் அதனால் தவித்து வரும் முத்துப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் படும் அவஸ்தைகளையும் சரி செய்தும் விதமாக இக்கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் வழக்கம்போல் ஐந்து அல்லது ஆறாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுவரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 7.56 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி

பாக்கியலட்சுமி: ஒரு காலத்தில் குடும்ப இல்லத்தரசிகள் பார்த்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது கோபி நடிப்புக்காக மட்டுமே பார்க்கும் படியாக இருக்கிறது. இதில் கோபி நடிப்பு நெகட்டிவாக இருந்தாலும் கதைக்கு ஏற்ற மாதிரி அவர் கொடுக்கும் ரியாக்ஷன் தான் ஹைலைட்டாக அமைந்து வருகிறது. அதிலும் தற்போது இனியா மாட்டிக்கொண்ட பப்பு விஷயத்தில் ராதிகா, பாக்யாவை வச்சு செய்யும் அளவிற்கு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். இதனைத் தொடர்ந்து காலேஜிலிருந்து டிசி கொடுக்கும் அளவிற்கு பிரச்சனை பூகம்பமாக வெடித்து விட்டது. இதனை சரி செய்யும் விதமாக பாக்கியா போராடி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் 7.75 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

மருமகள்: ஆதிரைக்கும் பிரபுக்கும் கல்யாணம் நடத்தும் விதமாக குடும்பமாக சேர்ந்து முடிவெடுத்து இருக்கிறார்கள். அதே மாதிரி பிரபு கல்யாணம் பண்ண நினைக்கும் பொண்ணும் ஆதிரை தான். அப்படி இருக்கும் பொழுது இவர்கள் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள் நடந்து வருகிறது. இதையெல்லாம் சமாளித்து இவர்களுடைய கல்யாணம் நடக்கும் விதமாக கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 8.04 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

கயல்: கயலுக்கும் எழிலுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கல்யாணத்திற்கு தடங்கள் வரும் விதமாக ஜாதக பிரச்சனை மற்றும் சிவசங்கரின் உண்மையான குணம் கயலுக்கு தெரிந்து விட்டது. இதனால் எழிலை தீபிகாவுக்கு விட்டுக் கொடுக்க கயலுக்கு மனதார விருப்பமில்லை. அதனால் மனதிற்குள் காதலை வைத்துக் கொண்டு வெளியில் எழிலை விட்டு பிரிந்து போவதாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சூழலில் ஜாதகம் விஷயம் கயலுக்கு தெரிந்துவிட்டால் அதிரடியான ஆரம்பம் சூடு பிடிக்கப் காத்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.40 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிங்கபெண்ணே: நாடகம் ஆரம்பித்த நாளிலிருந்து தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்த நாடகம் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்திற்கு போய்விட்டது. அந்த வகையில் கதையின் ட்ராக் மாறியதால் ஆனந்திக்கு தொடர்ந்து சிக்கல் வரும்படியாக அமைந்து வருகிறது. இதனால் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அன்புக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து மீண்டு ஆனந்தியை காப்பாற்றும் விதமாக அன்பு போராடி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் 8.67 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: ரோகிணியின் பொய்ப் பித்தலாட்டம், விஜயாவின் பேராசை மற்றும் மனோஜின் பகட்டு வாழ்க்கை இதை வைத்து கதை நகர்ந்து வந்தாலும் முத்து ஆட்டநாயகனாக ஆடி வருவதால் இந்த நாடகம் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்து விட்டது. இதைத் தாண்டி ரோகிணி பற்றிய விஷயங்கள் எப்பொழுது வெளி வரும் என்று மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ரோகிணியின் மகன் கிரிஷ் பிறந்தநாளுக்கு போகும் முத்து மீனாவுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் 9.18 புள்ளிகளை பெற்று கடந்த வாரமும் இந்த வாரமும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

விஜய் டிவியில் டாப்பில் இருக்கும் சீரியல்

- Advertisement -spot_img

Trending News