ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

40% வாக்குகளை வாரி சுருட்டிய அர்ச்சனா.. கார்ப்பரேட் புத்தியை காட்டும் விஜய் டிவி, பிக்பாஸ் டைட்டிலில் வைத்த ட்விஸ்ட்

Biggboss 7-Archana: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போடும் நேரம் வந்துவிட்டது. இந்த சீசன் பிக்பாஸ் ரசிகர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இருந்தாலும் தற்போது டைட்டிலை யார் தட்டி தூக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதன்படி தற்போது ஓட்டு நிலவரத்தில் முன்னணியில் இருக்கும் அர்ச்சனா தான் இதை வெல்வார் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் விஜய் டிவி மக்களின் ஓட்டுக்கும் கருத்துக்கும் எப்போதுமே மதிப்பு கொடுக்காது. அதனாலயே எப்போதோ வீட்டை விட்டு சென்றிருக்க வேண்டிய மாயா, பூர்ணிமா இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கின்றனர்.

Also read: 95 நாளில் 8 போட்டியாளர்களின் சாதனைகள்.. பிக்பாஸில் 9 முறை நாமினேஷன் வந்தும் எஸ்கேப் ஆன தெய்வத்தாய்

முகம் சுளிக்கும் வகையில் பேசுவது, விதிமீறல் என இவர்கள் செய்யும் அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது. ஆனாலும் விஜய் டிவி இவர்களை கன்டென்டுக்காக காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது பிக்பாஸ் டைட்டிலிலும் சேனல் தரப்பு தன் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது.

அந்த வகையில் யாருக்கு டைட்டிலை கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் இப்போது முடிவு செய்து விட்டார்களாம். அதில் அர்ச்சனாவுக்கு மட்டும் தரக்கூடாது என்பது தான் விஜய் டிவியின் மாஸ்டர் பிளான். இத்தனைக்கும் அர்ச்சனா 40 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை கைப்பற்றி இருக்கிறார்.

Also read: ஒரு போஸ்ட்க்கு 100 ரூபாய்.. இணைய கூலிப்படை செய்த வேலை, ஸ்க்ரீன் ஷாட்டுடன் மாட்டிய பிக்பாஸ் விஷப்பூச்சி

ஆனால் அவரை டீலில் விட முடிவு செய்திருக்கும் விஜய் டிவி, மணி அல்லது மாயாவை டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கலாம் என பேசி வருகிறார்கள். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அப்படி ஒன்று மட்டும் நடக்கவே கூடாது என முடிவெடுத்துள்ள ஆடியன்ஸ் விஜய் டிவிக்கு எதிரான கருத்துக்களையும் இப்போது பதிவிட்டு வருகின்றனர். மேலும் இறுதி நாள் நெருங்கி விட்ட நிலையில் இந்த முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறவும் வாய்ப்புள்ளது.

vote-bb7
vote-bb7

Trending News