புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Vijay TV : நெல்சன் தயாரிப்பில் முதல் ஹீரோ யார் தெரியுமா.? விஜய் டிவி பிரபலத்திற்கு கொடுத்த வாய்ப்பு

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இப்போது பிளமெண்ட் பிக்சர்ஸ் டஎன்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மே மூன்றாம் தேதி நெல்சன் தயாரிப்பில் முதல் படத்திற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படம் எடுத்தார். இந்த படம் 100 கோடியை தாண்டி வசூல் பெற்றது. அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் 650 கோடி வசூல் செய்திருந்தது.

இப்போது தன்னுடைய முதல் தயாரிப்பில் விஜய் டிவியிலிருந்து வெளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் கவினின் படத்தை தான் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சனின் இடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தால் சிவபாலன் இயக்க இருக்கிறார்.

நெல்சன் தயாரிப்பில் நடிக்கும் கவின்

கவினின் டாடா படத்திற்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பெறும் 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இதேபோல தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார்.

இப்போது நெல்சன் அதேபோல் தன்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். மேலும் கவின் நடிப்பில் ஸ்டார் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

மேலும் வருகின்ற மே பத்தாம் தேதி ஸ்டார் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு இதுவும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக நெல்சன் தயாரிப்பில் கவினின் படம் தொடங்க இருக்கிறது.

Trending News