வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எதிர்நீச்சல் 2க்கு போட்டியாக புது சீரியலை இறக்கும் விஜய் டிவி.. பாக்கியா சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க நேரம் வந்துருச்சு

Vijay Tv New Serial: ஒரு சீரியலுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் மக்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் மக்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்கும் விதமாக சன் டிவியில் எடுத்த அஸ்திவாரம் தான் எதிர்நீச்சல் 2. இதற்கான கதைகளை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு போக ஜீவானந்தம் களம் இறங்கி விட்டார்.

அதே போல் முதல் பாகத்தில் இருந்த ஆர்டிஸ்ட்களை வைத்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் சின்ன மாற்றம் என்னவென்றால் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதாவிற்கு பதிலாக தொகுப்பாளனி பார்வதி கமிட் ஆகி இருக்கிறார். இருந்தாலும் எதிர்நீச்சல் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்லா என்பதற்கு ஏற்ப மக்கள் எப்பொழுது சீரியல் வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் டிசம்பர் 30ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது. அதே மாதிரி எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திற்கு போட்டியாக விஜய் டிவியின் புத்தம் புது சீரியலை இறக்குவதற்கு முடிவு பண்ணி விட்டார்கள். அத்துடன் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதாவை இங்கே கொண்டு வரும் விதமாக அய்யனார் துணை என்ற நாடகத்தின் மூலம் கொண்டுவரப் போகிறார்கள்.

அதனால் எதிர்நீச்சல் 2க்கு போட்டியாக விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற நாடகத்தில் மதுமிதா கமிட் ஆக்கிவிட்டார். இதற்கு பதிலாக விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலை ஓரங்கட்ட போகிறார்கள். இந்த சீரியல் டிசம்பர் மாத கடைசியில் முடியப்போகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமிக்கு பதிலாக மதுமிதா நடிப்பில் அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாக போகிறது.

என்ன தான் எத்தனையோ சேனல்களில் புதுப்புது நாடகத்தை கொண்டு வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு ஈடாகாது. முக்கியமாக எதிர்நீச்சல் சீரியல்தான் மக்களின் ஃபேவரிட் என்பதற்கு ஏற்ப முதல் பாகம் ஒரு இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் ஜீவானந்தம் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த கேரக்டர்கள் செய்யும் விஷயங்களை மறக்கவே முடியாது. மறுபடியும் அந்த ஒரு அழகிய தருணத்தை பார்க்க மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Trending News